பதுளை பாடசாலையின் பெண் அதிபர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை மண்டியிடச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது.

இன்று நண்பகல் ஒரு மணியளவில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

இதன்போது ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்னாயக்க மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் ஆகியோரும் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு விசாரணைக்கு வருமாறு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஊவா மாகாண முதலமைச்சர் இன்று சட்டத்தரணிகளுடன் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.