பிரேசில் நாட்டில் மன்னர் ஒருவர் கடற்கரையோரப் பகுதியில் மணல் கோட்டை அமைத்து 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.
பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் பாரா டா திஜூகா பகுதியை சேர்ந்த 44 வயதான மார்சியோ மிஷயல் மடோலியாஸ் என்பவரே இவ்வாறு மணல் கோட்டை கட்டி அதன் மன்னராக வாழ்க்கை நடாத்தி வருகின்றார்.
மணல் சிற்பங்கள் செய்வதில் வல்லவரான மடோலியாஸ் சிறு வயதில் இருந்தே கடற்கரையில் வாழ்ந்து வந்துள்ளார்.
வேறு இடத்துக்கு செல்ல மனமில்லாத மடோலியாஸ்க்கு கடற்கரையோரம் வசிக்க அதிக அளவு வீட்டு வாடகை கொடுக்க வேண்டியிருந்தது.
எனவே அவரே தனக்காக அரண்மனையை கட்ட முடிவு செய்து, மணல் சிற்பங்கள் செய்யும் திறன் படைத்த மடோலியாஸ் அழகான மணல் அரண்மனையை கட்டியுள்ளார்
தான் கட்டிய அரண்மனையில் கடந்த 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அது இடிந்து விழாமல் இருக்க அவ்வப்போது அரண்மனையின் மீது தண்ணீர் தெளித்து கொள்கிறார்.
இந்த மணல் கோட்டையை காண பலர் அங்கு வருகின்றனர். அவருடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். அவர் தலையில் கிரீடமும் செங்கோலும் வைத்துள்ளார். அவரை அனைவரும் மன்னர் என்றே அழைக்கின்றனர். இருந்தாலும் மணல் கோட்டையும், சில புத்தகங்கள் மட்டுமே இவரது சொத்தாக உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM