இரத்தினபுரி - கல்இன்ன - மாரபன பகுதியில் குடிசையொன்றில் இருந்து 15 வயதுடைய சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இன்று காலை கண்டெடுக்கப்பட்ட இந்த சடலத்தில் கைகள் இரண்டும் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், துஷ்பிரயோகத்துக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.