2017 ஆம் ஆண்டின் முதல் 11 மாத காலப்­ப­கு­தியில் இலங்­கையின் ஏற்­று­மதி வரு­மானம் 10.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை பதிவு செய்­துள்­ளது.கடந்த 2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில், இது 10.82 சத­வீத வளர்ச்­சி­யாகும். குறித்த காலப்­ப­கு­தியில் சேவை ஏற்­று­ம­தி­யா­னது 5.8 சத­வீத வளர்ச்­சியை பதிவு செய்து 3.36 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை வரு­மா­ன­மாக ஈட்­டி­யுள்­ளது.

அதேபோல் ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு பிர­தான கார­ணி­யாக கைத்­தொழில் துறை விளங்­கி­யது. அதன்படி 2017 ஆம் ஆண்டின் முதல் 11 மாத காலப்­ப­கு­தியில் கைத்­தொழில் துறை­யா­னது மொத்த ஏற்­று­ம­தியில் 42 சத­வீத பங்­கினை வகித்­துள்­ளது. இதில் விவ­சா­யத்­துறை 18 சத­வீத பங்­க­ளிப்­பையும் மீன்­பி­டித்­துறை 42 சத­வீத பங்­க­ளிப்­பையும் வழங்­கி­யுள்­ளது.

மேலும் இக்­கா­லப்­ப­கு­தியில் கைத்தொழில் துறை ஏற்­று­மதி வரு­வா­யா­னது 6.12 சத­வீத வளர்ச்­சியை பதிவு செய்து  ஆண்டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில் 7,368 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை வரு­வா­யாகnபதிவு செய்­துள்­ளது. இதில் தைத்த ஆடைகள் ஏற்­று­மதி 2 சத­வீத அதி­க­ரிப்­பையும் இறப்பர் சார் உற்­பத்தி பொருட்கள் 8 சத­வீத அதி­க­ரிப்­பையும் மின் இலத்­தி­ர­னியல் சாத­னங்கள் 17 சத­வீத அதி­க­ரிப்­பையும் கட­தாசி சார் பொருட்­களின் ஏற்­று­மதி 21 சத­வீத அதி­க­ரிப்­பையும் பதிவு செய்­துள்­ளன.

 GSP Plus  வரிச்­ச­லுகை மீண்டும் இலங்­கைக்கு கிடைத்­த­தை­ய­டுத்து  2017 ஆம் ஆண்டின் முதல் 11 மாத காலப்­ப­கு­தியில் ஐரோப்­பிய சந்­தைக்­கான  ஆடை ஏற்­று­மதி   2.21  சத­வீத அதி­க­ரிப்பை பதிவு செய்து 1,800.81 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை வரு­வா­யாக பெற்­றுள்­ளது.

அதே போல் 2016 ஆம் ஆண்டின் குறித்த காலப்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கையில் 2017 ஆம் ஆண்டின் ஜன­வரி முதல் நவம்பர் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் கட­லு­ணவு உற்பத்­தி­களின் ஏற்­று­மதி ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில் 116.90  சத­வீத அதி­க­ரிப்பை பதிவு செய்து 49.41 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. இந்த அப­ரி­மி­த­மான வளர்ச்­சிக்கு இலங்­கையின் கட­லு­ணவு ஏற்று­ம­திக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் விதிக்­கப்­பட்ட தடை நீக்­கிக்­கொள்­ளப்­பட்­ட­மையே பிர­தான கார­ணி­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

விவ­சாய துறையின் ஏற்­று­ம­தி­களிலி­ருந்­தான வருவாய் 2016 ஆம் ஆண்டின் குறித்த காலப்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கையில் 2017 ஆம் ஆண்டின் காலப்­ப­கு­தியில் 18.40 சத­வீத வளர்ச்­சியை பதிவு செய்து 2,508.47 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை வரு­வா­யாக ஈட்­டு­வ­தற்கு தேயிலை ஏற்­று­மதி பெரும் பங்­கிகை வகித்­துள்­ளது. 

அதன்படி தேயிலை ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது குறித்த காலப்­ப­கு­தியில் ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில் 21.16 சத­வீத அதி­க­ரிப்பை பதிவு செய்து 1,386.2 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை வரு­வா­யாக பெற்­றுக்­கொ­டுத்து இத்­து­றைக்கு பங்­காற்­றி­யுள்­ளது.இந்த வளர்ச்­சிக்கு இலங்கை தேயிலைக்கான உலக சந்தையில் ஏற்ப ட்ட அதிக கேள்வி மற்றும் அதன் கார ணமாக ஏற்பட்ட விலை உயர்வு என்பன காரணமாக அமைந்தன.

இலங்கையின் ஏற்றுமதி சந்தையில் அமெரிக்கா,இங்கிலாந்து,இந்தியா,ஜேர்மனி,சீனா, மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் மொத்த ஏற்றுமதியில் 55 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.