அமெரிக்க அரசின் யு.எஸ் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் புரைலர் கோழி முகாமைத்துவ பயிற்சி திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிக்கும் விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.
யு எஸ் எயிட்டின் வாழ்வாதார அபிவிருத்தி உதவி வழங்கும் சொலிட் திட்டத்தில் கீழ் ஓட்டமாவடி, மாங்கேணி, காத்தான்குடி, பாலமுனை ஆகிய பிரதேசங்களில் புரைலர் கோழி வளர்புத் திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி புரைலர் முகாமைத்துவ பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்ற 80 பயணாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஒரு பயனாளிக்கு 100 கோழிக் குஞ்சுகள் வீதம் 8000 குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. குஞ்சுகளை வளர்ப்பதற்காக போதிய வசதி வாய்ப்புக்கள் பயணாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், யு எஸ். எயிட்டின் பிரதி குழுத் தலைவர் அந்திரோ பேக்கர், குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் ரி.சக்திவேல் உட்பட கலந்து கொண்டனர்.
இதன் போது புரைலர் முகாமைத்தவ பயிற்சி கைநூல் அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்சிற்கு குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் வழங்கி வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM