பிர­த­ம­ரிடம் உள்ள அதி­கா­ரங்­களை பெற்­றுக்­கொள்ளும் நோக்­கத்தில் ஜனா­தி­பதி செயற்­ப­ட­வில்லை. எனினும் பிர­த­மரின் அதி­கா­ரங்­க­ளுக்கு மேலாக ஜனா­தி­பதி தீர்­மானம் எடுக்­க­வேண்டும் என அமைச்சர் சுசில் பிரே­ம்­ஜெ­யந்த தெரி­வித்தார். 

எமக்கு பொரு­ளா­தார அதி­கா­ரங்­களை கொடுத்தால் சரி­யான நாட்­டினை நடத்­திக்­காட்­டுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. 

இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் மக்­க­ளுக்கு பல்­வேறு வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் உள்­ளன. பொரு­ளா­தார ரீதியில் மக்கள் பல்­வேறு சிக்­கல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். கடந்த காலங்­களில் முன்­வைக்­கப்­பட்ட பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களின் சில மோச­மான கார­ணி­களும் உள்­ளன. வரி அற­வீ­டுகள் மற்றும் திட்­ட­மிடல் போன்­ற­வற்றில் மக்­க­ளுக்கு பாத­க­மான கார­ணிகள் உள்­ள­டங்­கு­கின்­றன. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பொரு­ளா­தார சபை உரு­வாக்­கப்­பட்­டது. மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் இவ்­வா­றான ஒரு சபை உரு­வாக்­கப்­பட்டு அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

மேலும் கடந்த காலங்­களில் பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்கள்   அமைச்­ச­ர­வையின் நேரடி தலை­யீட்டில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. மாறாக பிர­தமர் தலை­மையில் அமைக்­கப்­பட்ட பொரு­ளா­தார ஆலோ­ச­னைக்­கு­ழுவின் பணிப்பின் பெய­ரி­லேயே இவை அமைச்­ச­ர­வைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன. ஆகவே இதில் சில குள­று­ப­டுகள் உள்ள கார­ணத்­தி­னாலும் அமைச்­ச­ர­வைக்கு நேர­டி­யாக அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும் என்ற கார­ணத்­தி­னா­லுமே ஜனா­தி­பதி இவ்­வா­றான நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுத்தார். மக்­க­ளுக்கு பெரு­ளா­தார சுமை தெரி­யாத வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

எனினும் பிர­த­மரின் கீழ் உள்ள பொரு­ளா­தார அதி­கா­ரங்­களை முழு­மை­யாக அப­க­ரிக்க வேண்டும் என்ற அர்த்­தத்தில் ஜனா­தி­பதி எதையும் கூற­வில்லை என நான் நினைக்­கிறேன். 

எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினால் ஐக்­கிய தேசியக் கட்­சியை விடவும் சிறப்­பாக பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்ல முடியும். சரி­யான வேலைத்­திட்­டங்­களை செய்ய வேண்டும் என்றால் எம்மிடம் பொருளாதார தீர்மானங்களை கொடுத்தால் போதும். நாம் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் செய்தும் காட்டியுள்ளோம்.எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்கள் என்னவோ அதற்கமைய நாமும் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.