அவுஸ்த்திரேலியா மெல்பேர்னில் நேற்று நடைபெற்ற  பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் ஆஜர்ன்டினாவின் டியகோ ஸ்வோர்ட்ஸ்மேனுடன் களம் கண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த போட்டியில் 6-3, 6-7, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற நடால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

31 வயதான ரபேல் நடால் டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் நிலை வீரராக உள்ளார். இதுவரையிலும் 75 பட்டங்களை வென்றெடுத்துள்ளார்.

தற்போதைய அவுஸ்த்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் இவர் பட்டம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.