சீனா - ஷயோடாங் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிலிருந்த 20,000 ரூபாய்  பணத்தை சிறுவன் திருடி செலவழித்துள்ளான்.

இதுபற்றி அவனின் தாய் விசாரித்ததற்கு சிறுவன் சரியான பதிலை கூறாமலிருக்க ஆத்திரமடைந்த அவனின் தாய் தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அந்த சிறுவனை கயிற்றால் கட்டி தரதரவென சாலையில் இழுத்து சென்றுள்ளார்.

இதைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் தனது கைத்தொலைப்பேசியில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பியதோடு பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

விடயம் அறிந்த பொலிஸார் குறித்த பெண்னை கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.

தனது கணவரின் ஒரு மாத சம்பளத்தை தனது மகன் திருடி செலவு செய்துவிட்டதால், ஆத்திரத்தில் அப்படி செய்ததாக பொலிஸாரின் விசாரணையில் அப்பெண் தெரிவித்துள்ளார்.