யூனியன் அஷ்யூரன்ஸ் நாட்டின் காப்புறுதித்துறையில் தொடர்ச்சியாக புத்தாக்கமான மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுகளை அறிமுகம் செய்து வருகிறது. 

இதன் ஒரு அங்கமாக, யூனியன் அஷ்யூரன்ஸ் தனது சுகாதார காப்புறுதித்திட்டமான “யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ்” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இதனூடாக முழுக்குடும்பத்துக்கும் மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்கள் அனுகூலங்கள் போன்றவற்றை வழங்குகிறது. 

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் திட்டம், யூனியன் லைஃவ் அட்வான்டேஜ் திட்டத்தின் மேலதிக அங்கமாகவும் அமைந்துள்ளது.

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் திட்டத்தினால் காப்புறுதிதாரருக்கும் அவரில் தங்கியிருப்போருக்கும் காப்புறுதி வழங்கப்படும். காப்புறுதிதாரருக்கு மிகவும் சௌகரியமான சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில், யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் மூலமாக பிரத்தியேகமான மற்றும் நுட்பமான வெளிநாட்டு காப்பீடு சேவை வழங்கப்படுகிறது. 

இந்த அம்சத்தின் மூலமாக இலங்கையிலும், இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், அக்கால பகுதியில் ‘Cashless Service’ சேவையையும் பெற்றுக்கொள்ளலாம்.

சர்வதேச ரீதியில் காணப்படும் புகழ்பெற்ற சுகாதார பங்காளர்களுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ள உறுதியான பங்காண்மைகளின் அடிப்படையில், வெளிநாட்டு காப்பீட்டு அனுகூலத்தின் மூலமாக பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் பல வழங்கப்படுகின்றன. 

உலகின் சிறந்த நஷ்டஈடுகளை கையாளும் நிறுவனங்களில் ஒன்றான Euro-Center, யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் உடன் கைகோர்த்துள்ளது, இதனூடாக சௌகரியமான கண்காணிப்பு சேவைகள் வெளிநாட்டு சிகிச்சைகளுக்காக வழங்கப்படுகின்றன. Medilnk இனால் நவீன இலத்திரனியல் சுகாதார பராமரிப்பு வலையமைப்பு உட்கட்டமைப்பு வழங்கப்படுவதுடன், உள்நாட்டு மூன்றாம் நபர் கொடுப்பனவு சேவைகளும் வழங்கப்படுகின்றன. மேற்படி சகல அனுகூலங்களும் ‘Cashless Service’ சேவையுடன் செயற்படுத்தப்படும். யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் காப்புறுதிதாரர்களுக்கு வழங்கப்படும் விசேடமான சலுகையாக, உலகின் சிறந்த வைத்தியர்களினால் தமது சிகிச்சை தொடர்பான மாற்று கருத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு நம்பிக்கையுடனும் இரகசியத்தன்மையுடனும் வழங்கப்படுகிறது.

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் திட்டத்தினால் காப்புறுதிதாரருக்கு விசேடமான பரந்தளவு அனுகூலங்கள் காப்புறுதிதாரருக்கு வழங்கப்படுகிறது. பயன்படுத்தக்கூடிய 100 சதவீத தொகை பெறப்பட்டிருந்தால், காப்புறுதியின் அனுகூலங்களை மீள செயற்படுத்திக்கொள்ள முடியும். 

ஏற்கனவே வைத்தியசாலை அனுமதியின் காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிடும் சந்தர்ப்பங்களில் எழும் செலவீனங்களை இதனூடாக பெற்றுக்கொள்ள முடியும். காப்புறுதி ஆண்டொன்றில் எவ்விதமான நஷ்டஈடுகளும் கோரப்படாத நிலையில், ஆண்டொன்றுக்கான வருடாந்த அனுகூல எல்லை அடுத்து வரும் ஆண்டில் 25 சதவீதத்தால் அதிகரிக்கும். இது இந்த காப்புறுதியில் காணப்படும் சிறப்பம்சமாகும். நஷ்டஈடு கோராமை மற்றும் புதுப்பித்தல் அனுகூலம் ஆகியவற்றுடன், யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் காப்பீட்டின் மூலமாக அங்க மாற்றல், செயற்கை அவயவங்கள் பொருத்தல் போன்றவற்றுக்கு ஏற்படும் செலவீனங்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. 100000 ரூபா முதல் 20 மில்லியன் ரூபா வரை பரந்தளவு அனுகூலத்திட்டங்களை தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பு காப்புறுதிதாரருக்கு வழங்கப்படும்.

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் காப்புறுதிதாரர்களுக்கு தாம் பெற்றுக்கொண்ட காப்புறுதித்திட்டத்தின் பெறுமதியின் பிரகாரம், இலவசமாக GOYO fitness ட்ரக்கர் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

நவீன வாழ்க்கை முறையில் காணப்படும் மாற்றங்கள் காரணமாக சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துக்கான இடர் அதிகரித்துள்ளது. எமது வேலைப்பளு நிறைந்த வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள எம்மில் பலர் தவறுகிறோம். யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் காப்புறுதித்திட்டம் சிறந்த சௌகரியமான தீர்வாக அமைந்துள்ளது. இலகுவாக செயற்படுத்த முடியும் என்பதுடன் நீங்கள் எதிர்பார்க்கும் மேலதிக அனுகூலங்களை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் தொடர்பான மேலதிக விவரங்களையும் அதில் காணப்படும் மேலதிக அனுகூலங்கள் தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்ள எமது நிதி காப்புறுதி ஆலோசகர்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது எமது வாடிக்கையாளர் ஹொட்லைன் இலக்கமான 0112 990 990 உடன் தொடர்பு கொள்ளலாம். மாறாக அருகிலுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் கிளைக்கு விஜயம் செய்யலாம்.