புது வருடம் ஆரம்பித்ததுடன் தமது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமானதோர் செய்தியை மொபிடெல் தெரிவிக்கிறது. 

மொபிடெல் தமது புகழ்பெற்ற கேஷ் பொனான்ஸா திட்டத்தை 2018 ஆம் ஆண்டில் புதுப்பித்துள்ளது. மேலும் பல பெறுமதிமிக்க பரிசுகளுடன் மொபிடெல் கேஷ் பொனான்ஸா இப்புதுவருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த மொபிடெல் கேஷ் பொனான்ஸா 2018 சலுகைகளானது பெறுமதிமிக்க Mercedes Benz கார்கள் உட்பட மேலும் பல பரிசுகளை வழங்கவிருக்கிறது. நாளாந்தம் மற்றும் காலாண்டு ரீதியாக குலுக்கள் முறையில் தெரிவு செய்யப்படும் உண்மையான மற்றும் அதிர்ஷ்டமிக்க வெற்றியாளர்களான மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு ரூபா 190 மில்லியன் பெறுமதியிலான பணப்பரிசுகளை வருடம் முழுவதும் வென்றிட முடியும். 220,000 நாளாந்த வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு ரூபா 500 வீதம் வருடம் முழுவதும் வெல்லலாம். 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 24 மொன்டெரோ ஜீப்களை வழங்கிய மிகப் பெரிய சலுகைத் திட்டத்தை முன்னெடுத்த இலங்கையின் முதலாவது கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குனராக மொபிடெல் திகழ்கிறது. அதேபோல் இவ்வருடம் அது மேலும் மேம்படுத்தப்பட்டு, தமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு Mercedes Benz கார்களை வழங்குகின்றது.

கேஷ் பொனான்ஸா என்பது மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கான ரீசார்ஜ்/ பில்கள் கொடுப்பனவு சலுகைத்திட்டம் ஆகும். மொபிடெல் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் ப்ரோட்பேன்ட் வாடிக்கையாளர்கள் இம்மொபிடெல் கேஷ் பொனான்ஸாவுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஒவ்வொரு ரூபா 50 பெறுமதியான முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு செய்பவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப்பெறுகின்றனர். 

இதற்கு தனிப்பட்ட பதிவுச் செயன்முறை இல்லை. ஆனாலும் அனைத்து மொபிடெல் வாடிக்கையாளர்களும் இக்குலுக்கள் முறைப்போட்டிக்கு தகுதியுடையவர்கள் ஆவர். முற்கொடுப்பனவு இணைப்புடைய வெற்றி பெற்ற வாடிக்கையாளர்கள் அதே மதிப்புடைய அழைப்பு நேரத்தை மற்றும் DATA பரிசாகவும்  மற்றும் பிற்கொடுப்பனவு இணைப்புடைய வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பிற்கொடுப்பனவு பட்டியலில் தள்ளுபடியும் பெற்றுக் கொள்ளலாம். கேஷ் பொனான்ஸா வெற்றியாளர்கள்ரூபவ் வாடிக்கையாளர் சேவை 071 27 55 777 எனும் இலக்கத்தினூடாகவும் அஞ்சல் வழியாகவும் மற்றும் எழுத்து மூலமாகவும் அறிவிக்கப்படுவர்.

வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வெற்றி பெற்ற எந்த பரிசுகளுக்கும் கூடுதல் கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் கேஷ் பொனான்ஸா வெற்றிச்செயற்திட்டம் நாடுமுழுவதும் உள்ள மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தந்தது. 24 வெற்றியாளர்களுக்கு இரண்டு வருடகாலத்துக்கு 24 சொகுசு மொன்டெரோ ஜீப்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. அதற்கு மேலதிகமாக இரண்டு வருட காலத்துக்கு 800,000க்கும் மேற்பட்ட அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. 

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மொபிடெல் வாடிக்கையாளர்கள் ரூபா 700 மில்லியனை பெற்றுக்கொண்டனர்.

மொபிடெல் வழங்கிய இப்பரிசுகள் மூலம் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. இதனால் அதன் மதிப்புமிக்க உண்மையான வாடிக்கையாளர்களுக்காக மேலும் பெறுமதி சேர்க்க தம்மை அர்ப்பணித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் மேலும் விலை உயர்ந்த, மதிப்புமிக்க Mercedes Benz கார்களை வழங்குவதன் மூலம் கேஷ் பொனான்ஸாவின் பரிசுப் பெறுமதியும் உயர்ந்துள்ளது.