பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு தொடரில் காயமடைந்த இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நாடு திரும்புகிறார்.

இந்நிலையில் தற்போது இடம்பெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார். 

குறித்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணித் தலைவராக செயற்பட்டுவந்த அஞ்சலோ மெத்தியூஸிற்கு ஏற்பட்ட காயத்தையடுத்து  அவருக்குப் பதிலாக தினேஷ் சந்திமால் தலைவராக செயற்பட்டார். 

இந்நிலையில் முத்தரப்பு தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு சந்திமல் தானே தலைமை தாங்குவதாக தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெற்ற நேற்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காயத்தால் நாடுதிரும்பியுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள 2 டெஸ்ட் தொடர்களிலும் பங்கேற்கமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.