இலங்­கையின் பொரு­ளா­தார கொள்­கை­யினை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் சரி­வரச் செய்­ய­மு­டி­ய­வில்லை. மூன்று ஆண்­டு­களில் மக்­க­ளுக்­கான பொரு­ளா­தார கொள்கை உரு­வா­க­வில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறு­கின்றார். 

Image result for மைத்­தி­ரி­பால சிறி­சேன virakesari

மத்­திய வங்கி பிணை­முறி ஊழலில் யார் கள்வர் என்­பது மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரி­கின்­றது.  ஊழல்வாதிகள் யாராக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக நான் சட்ட நட­வ­டிக்கை முன்­னெ­டுத்து தண்­டனை வழங்­குவேன் என்றும்   அவர் குறிப்­பிட்டார். 

கேகாலை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்ட போதே  ஜனா­தி­பதி இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்.

தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதன் நோக்கம், அதனை அமைக்க கடி­ன­மான நகர்­வு­களை கையாண்ட விதம் என்­பன  இன்று பல­ருக்கு நினைவில் இல்­லாது போயுள்­ளன. எனினும் நான் எதற்­காக அர­சாங்­கத்தை அமைத்­தேனோ அதே நோக்­கத்தில் இருந்தே இன்­று ­வ­ரையில்  செயற்­பட்டு வரு­கின்றேன்.  கடந்த மூன்று வரு­டங்­க­ளாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு நாட்டின் பொரு­ளா­தார முகா­மைத்­து­வத்­திற்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவர்­களின் வேலைத்­திட்­டங்கள், பொரு­ளா­தார முகா­மைத்­துவ தீர்­மா­னங்கள் ஆகி­யன ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் மக்கள் திருப்­தி­ய­டையும் பொரு­ளா­தார நிவா­ர­ணங்கள் கடந்த காலங்­களில் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. ஆகவே மக்­க­ளுக்கு சலு­கை­க­ளை­களை வழங்க வேண்டும். வாழ்­வா­தார சுமை­யினை குறைக்க வேண்டும். ஆகவே  இவ்­வ­ருடம் முதல் அப்­பொ­றுப்பை நான் கையேற்­க­வுள்ளேன். 

இதற்­காக மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் தேசிய பொரு­ளா­தார சபையை நான் அமைத்தேன்.   இத­னூ­டாக நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முன்­னெ­டுத்து மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் திட்­டங்­களை நான் கையாள்வேன்.  தேசிய கைத்­தொழில், தேசிய உற்­பத்தி மற்றும் தேசிய முத­லீடு அனைத்­தையும் பாது­காத்து நாட்டின் தேசிய பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்தும் பொறுப்பை நானே ஏற்­று­க்கொள்­கின்றேன். 

மேலும் இலங்­கையின் மக்கள் எவரும் நாட்­டினை விட்டு வெளி­யேறி வேறு நாடு­களில் வேலை­தேட வேண்டாம். நாட்டை விட்டுச் செல்­லாது தாய் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு என்­னுடன் கைகோ­ருங்கள். உங்கள் அனை­வ­ரையும் நான் பாது­காத்­துக்­கொள்­கிறேன்.  அனைத்து தேசிய கைத்­தொ­ழில்­துறை சார்ந்­த­வர்­க­ளி­டமும் முத­லீட்­டா­ளர்­க­ளி­டமும் நான் இதனைக் கேட்­டுக்­கொள்­கிறேன்.  இயற்கை வளங்கள் நிறைந்த எமது நாட்டை உலகில் அபி­வி­ருத்தி அடைந்த நாடாக மாற்­று­வ­தற்கு எந்­த­வி­த­மான தடையும் இல்லை. இருக்­கின்ற ஒரே தடை ஊழல் அர­சி­ய­லாகும். ஊழல் நிறைந்த அர­சி­யலில் இன்று நாட்டின் அனைத்து சொத்­துக்­களும் சூறை­யா­டப்­பட்டு வரு­கின்­றன. ஊழல் அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் பய­ணத்தை தான் எதிர்­வரும் பெப்­ர­வரி 10 ஆம் திகதி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுடன் ஆரம்­பிக்­க­வுள்ளேன்.  

நாட்டின் அனைத்து சமயத் தலை­வர்கள், கல்­வி­மான்கள் மற்றும் நாட்டின் அனைத்து மக்­க­ளையும் ஒரே கொடியின் கீழ் கொண்டு வந்து இந்த நாட்டை ஊழல் மோசடி இல்­லாத உலகின் உன்­னத தேச­மாக கட்­டி­யெ­ழுப்பும் பய­ணத்தை இந்த தேர்தல் வெற்­றி­யுடன் ஆரம்­பிப்போம். அதேபோல் கேகாலை மாவட்­டத்தில்  அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. பாரிய நீர்த்­தேக்­கங்­களை அமைக்க ஆயத்­த­மாகி வரு­கின்றோம். எனினும் இந்த மாவட்­டத்தின் இயற்கை வளங்­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாத வகையில் வெள்ள நிலை­மை­களை கட்­டுப்­ப­டுத்தி கடலைச் சென்­ற­டையும் நீரை உலகில் உயர் தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி குழாய் வாயி­லாக வடக்­கிற்கு கொண்டு செல்லும் திட்­ட­மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்ளோம்.  

 அனைத்து வேலைத்­திட்­டங்­க­ளையும் ஊழல் இல்­லாது தூய்­மை­யாக ஆரம்­பிக்­கவே நான் வேலைத்­திட்­டங்­களை வடி­வ­மைத்து வரு­கின்றேன். 

இன்று மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை குறித்து நாட்டு மக்கள் நன்­றாக அறிந்­துள்­ளனர். உண்­மை­யான குற்றவாளிகள்  யார், எவ்வாறு ஊழல் இடம்பெற்றது என்பது குறித்து மக்களுக்கு உண்மைகள் தெரிந்துள்ளன. மத்திய வங்கி பிணைமுறி குறித்து ஆணைக்குழு என்னிடம் வழங்கிய அறிக்கையில் அனைத்து விடயங்களும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆகவே ஊழல் வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை முன்னெடுத்து தண்டனை வழங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.