( லியோ நிரோஷ தர்ஷன் )

நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, மேற்குலகின் அடிமையாக இலங்கையை உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உடனடியாக பதவிவிலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.