அர­சாங்­கத்தின் கடன் மட்டம் 9,387  பில்­லி­யனால்  அதி­க­ரித்­துள்ள நிலையில்   இலங்­கைக்­குள்ளும் வெளி­யி­லு­மான  கடன்­ களை அதி­க­ரிக்க ஏற்­பாடு செய்­யவும்  பொதுக்கடனை முகாமை செய்­யவும் செயற்­படுகடன் முகா­மைத்­துவ சட்­ட­மொன்று இயற்­றப்­ப­ட­வுள்­ள­தாக  அர­சாங்க தரப்பு   தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

Image result for பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க

அர­சாங்­கத்தின்  நிதித் தேவைகள் மற்றும்  கடன்­களை மீளச் செலுத்­து­வ­தற்­கான  கடப்­பாடு என்­ப­வற்றை  சாத்­தி­ய­மான குறைந்த  செலவில் நடுத்­தர மற்றும்  நீண்ட கால தவ­ணையில்   அது தொடர்­பான அபாயம்  தொடர்­பான கவ­னத்­துடன்   எட்­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­வதும் இதன் இலக்­கா­க­வுள்­ ளது.

இந்­நி­லையில் தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ரா­க­வு­முள்ள  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  அமைச்­ச­ர­வைக்­கான தனது சுற்ற­றிக்­கையில், கடன் பேண் தகை­மை­யா­னது   2016  ஆம் ஆண்டில்  அர­சாங்க வரு­மா­னத்தில் 76  சத­வீ­த­மாக   உள்ள நிலையில்  அது  தேசிய ரீதியில்  கவலை தரும் ஒன்­றா­க­வுள்­ளது எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; அர­சாங்கம்  கடனை திருப்­பிச்­செ­லுத்­து­வதில் இதற்கு முன் ஒரு­போதும் இல்­லாத வகையில்  தனக்­கு­ரிய கடப்­பாட்­டி­லி­ருந்து வழு­வாத போதும்  எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய முக்­கிய எந்­த­வொரு அபாய நிலை­யையும் தடுப்­ப­தற்­காக சரி­யான கடன் சீர்­தி­ருத்­த­மு­றை­யொன்றை ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

புதிய சட்­ட­மா­னது புதிய தீர்­மா­ன­மொன்றின் மூலம் குறிப்­பிட்ட நிதி­யாண்டு காலப் பகு­தியில் பணத்தை  அதி­க­ரிப்­ப­தற்­கான அங்­கீ­கா­ரத்தை வழங்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்­துக்கு அனு­ம­தி­ய­ளிக்­கிறது.  ஆனால் அந்தப் பணத்தொகை­யா­னது  அதற்கு முன்­ன­ரான நிதி வரு­டத்தின் இறு­தி­யி­லான மொத்த  நிலு­வை­யி­லுள்ள கடனின் 10 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக இருக் கக் கூடாது.

இந்தக் கட­னா­னது அர­சாங்க பொது கடன்­க­ளுக்­கான மீள் நிதி­யிடல் மற்றும் முற்­பண நிதி­யிடல்  நோக்­கங்­க­ளுக்­காக   நாணய சட்ட விதி,  உள்­நாட்டு திறை­சேரி சட்­ட­மூல கட்­ட­ளைச்­சட்டம் மற்றும் பதி­வு­செய்­யப்­பட்ட பங்­குகள் மற்றும் பிணைகள் கட்­டளைச் சட்டம்  என்­பன உள்­ள­டங்­க­லான  சம்­பந்­தப்­பட்ட  சட்­டங்­க­ளி­லுள்ள  நிபந்­த­னை­க­ளுக்கு அமை­வா­கவே அதி­க­ரிக்­கப்­படும். இந்த சட்­ட­மூ­ல­மா­னது விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது என அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­ச­மயம் அர­சாங்­க­மா­னது  பிரே­ரிக்­கப்­பட்ட  பொத்­து­ஹர -  ஹல­கெ­தர   மத்­திய அதி­வே­க­ப்பாதை நிர்­மா­ணிப்­ப­தற்­கான  கட­னுக்கு தகுதி பெறு­வ­தற்­காக  ஜப்­பா­னிய  வங்கியொன்றுக்கு 14  பில்லியன்  ரூபா காப்புறுதி தவணைக் கட்டணத்தைச்  செலுத்தக் கோரப்பட்டுள்ளது எனவும்  மேற்படி பாதை நிர்மாணத்திற்கான  கடன் தொகை இலங்கையின் கடனை மீளச் செலுத்துவதற்கான இயலுமை குறித்து மதிப்பீடு  செய்யப்பட்ட பின்னர் தீர்மானிக் கப்படவுள்ளதாகவும் அரசாங்க தரப்பு அதி காரிகள் கூறுகின்றனர்.