கொக்கரெல்ல நகரில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகினர்.

தம்புள்ளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று ஒரே நேரத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் டிப்பர் ரக வாகனம் ஒன்றின் மீதும் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் கொக்கரெல்ல, கல்லிந்தகொட்டுவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்கள் என்று தெரியவந்துள்ளது.

லொறி மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை இன்று (21) நடைபெறுகிறது.