வெல்லம்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டியவிலுள்ள 20 வீட்டுத்திட்டத்திலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலிலேயே குறித்த மூவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.