வெளிநாட்டு சிகரட்டுகளை சட்ட விரோதமாக இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் குருணாகலையைச் சேர்ந்த வர்த்தகர் என்று தெரியவந்துள்ளது.

அவர் வசமிருந்த 23 ஆயிரத்து 889 சிகரட்டுகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிகரட்டுகளின் பெறுமதி சுமார் பன்னிரண்டு இலட்ச ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வர்த்தகர், நியமிக்கப்பட்ட 2 இலட்ச ரூபா பிணைத் தொகையைச் செலுத்தியபின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.