ஆப்கானிஸ்தானில், பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் துப்பாக்கித் தாக்குதல் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ‘இன்டர்கொன்ட்டினென்ட்டல்’ ஹோட்டலினுள் புகுந்த நான்கு துப்பாக்கிதாரிகள் தாக்குதலை ஆரம்பித்தனர்.

தற்கொலை அங்கிகளையும் ரொக்கெட் லோஞ்சர்களையும் அவர்கள் தரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகளில் இருந்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதல் காரணமாக ஹோட்டலின் ஒரு பகுதி தீப்பிடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் விசேட அதிரடிப் படையினர் ஹோட்டலைச் சுற்றிவளைத்து தாக்குதல்தாரிகளைக் குறிவைத்து பதில் தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இதில், இரண்டு பேர் உயிரிழந்தபோதிலும் எஞ்சிய இருவர் ஹோட்டலினுள் மறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களையும் கொன்று, ஹோட்டலில் உள்ள விருந்தினர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஆப்கான் படையினர் இறங்கியுள்ளனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ளனர்.