பண்டிகைக் காலத்தை முன்னிட்டு HSBC மற்றும் சிங்கர் இடையில் பிரத்தியேகமான கூட்டிணைவு

19 Nov, 2015 | 10:56 AM
image

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, HSBC கடனட்டை வாடிக்கையாளர்களுக்கு 2015 டிசம்பர் 31 வரை தனது அனைத்து உற்பத்தி வரிசைகளிலும் பண்டிகைக் கால தள்ளுபடிகள் மற்றும் 0% வட்டியின்றிய கொள்வனவுத் திட்டங்களை வழங்கும் பொருட்டு HSBC உடன் பிரத்தியேகமான பங்குடமையொன்றை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

பல்வேறு வகைப்பட்ட நுகர்வோர் இலத்திரனியல் உற்பத்திகள், மின்னியல் சாதனங்கள், தளபாடங்கள் மற்றும் ஏராளமான வீட்டுப் பாவனைப் பொருட்கள் என அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் HSBC வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய முடியும். இவை அனைத்தும் சிங்கரின் நாடளாவியரீதியிலான வலையமைப்பின் கீழ் Samsung, Hitachi, Beko, Sharp, Singer, SISIL, SONY, Tefal, Moulinex, Philips, DELL மற்றும் பல பிரபலமான சர்வதேச வர்த்தகநாமங்களில் கிடைக்கப் பெறுகின்றன.

இந்த வகையில் சிங்கர் பிளஸ், சிங்கர் மெகா, சிசில் வேர்ல்ட் மற்றும் சிங்கர் ஹோம்ஸ் காட்சியறைகளில் சிங்கரின் இணையற்ற உத்தரவாதம் மற்றும் அதன் பிரத்தியேகமான நாடளாவியரீதியிலான விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றுடன் இந்த பண்டிகைக்கால தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் தற்போது பெற்று அனுபவிக்க முடியும்.

சிங்கர் கொண்டுள்ள பல்வேறு வர்த்தகநாமங்களின் கீழான உற்பத்தி வரிசை மற்றும் எங்கும் பரவியுள்ள விசாலமான விற்பனை வலையமைப்பு ஆகியவற்றின் காரணமாக சிங்கர் அனைத்து இலங்கை மக்கள் மத்தியிலும் விரும்பப்படும் தெரிவாக மாறியுள்ளது. சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகத்துறை பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன விளக்குகையில்,

“எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்குவதும், இலகுவில் கொள்வனவு செய்ய வழிகோலும்  சலுகைகளும் சில்லறை வியாபாரத் துறையில் நாம் தலைமைத்துவ ஸ்தானத்தில் திகழ்வதற்கான இரு முக்கிய அம்சங்களாகும். இதுவே மிக நீண்ட காலமாக எமது தொழிற்பாடுகளில் பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கிவந்துள்ள உறுதிமொழியாகவும் அமைந்துள்ளது” என்றார்.

“HSBC இனைப் போன்ற முன்னணி வர்த்தகநாமம் ஒன்றுடன் பிரத்தியேகமான ஊக்குவிப்பு ஒன்றை ஒன்றிணைந்து அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மிகவும் ஆவலுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் களைகட்டும் பண்டிகைக் காலத்தில் HSBC கடனட்டை வாடிக்கையாளர்கள் ஏராளமான வீட்டுப்பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பினை இந்த சலுகை அவர்களுக்கு வழங்குகின்றது” என்று குறிப்பிட்டார்.

HSBC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை மற்றும் சொத்து முகாமைத்துவத் துறையின் தலைமை அதிகாரியான நிலாந்த பஸ்தியன் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாம் பண்டிகைக் காலத்தை எட்டும் தருணத்தில் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கும் விசேட தருணங்களை ஏற்படுத்தி எமது பங்களிப்பை வழங்க விரும்புகின்றோம்.

அந்த வகையில் உலகளாவில் பிரபலமான வர்த்தகநாமங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு இயலும் வகையில் நியாயமான விதத்திலும், சௌகரியத்துடனும் நுகர்வோர் சாதனங்களை HSBC வாடிக்கையாளர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப கொள்வனவு செய்ய இடமளிக்கும் இந்த பங்குடமையை சிங்கருடன் ஏற்படுத்தியுள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

பண்டிகைக் காலத்தை கொண்டாட ஆயத்தமாகும் வேளையில், இந்த உற்சாகமான தருணத்தை தமது நண்பர்கள் மற்றும் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இந்த பண்டிகைக்கால தள்ளுபடிகள் மற்றும் இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு பயன்மிக்கதாக அமையுமென நாம் நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Fems H.E.R. மையத்தினால் இலங்கையின் பெண்களுக்கு...

2023-09-18 19:45:01
news-image

இலங்கையில் அதிகம் விரும்பப்படும் மிகச்சிறந்த 10...

2023-09-12 10:07:55
news-image

புதிய வளாகத்துடன் கூட்டாண்மை வங்கியியல் அனுபவத்தை...

2023-09-11 16:36:47
news-image

மக்கள் வங்கி 2 மில்லியனுக்கும் அதிகமான...

2023-09-11 16:43:37
news-image

"லிபேரா ஜூனியர்" பிரமாண்டமான வெளியீட்டு விழா

2023-09-11 11:20:19
news-image

சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள்...

2023-09-04 12:21:42
news-image

தரத்திற்கான அங்கீகாரம் : IDL இன்...

2023-08-31 20:07:15
news-image

ரூபா 9.4 பில்லியன் தொகையை வரிக்கு...

2023-08-31 16:56:39
news-image

யாழ்ப்பாணத்தின் அழகை உலகுக்கு எடுத்துச் செல்லும்...

2023-08-31 21:54:09
news-image

குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவோம் :...

2023-08-25 15:40:33
news-image

இலங்கை காப்புறுதியாளர்கள் சங்கத்தின் இரத்த தானம்

2023-08-25 11:13:04
news-image

மக்கள் வங்கி, சர்வதேச இளைஞர் தினத்தில்...

2023-08-24 21:20:43