அனூராதபுரம் - உனகொல்லேவ பிரதேசத்தில் காட்டு யானை ஒன்றினை கொலை செய்துள்ள நபர் ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெகிராவ நீதவான் நீதிமன்றில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.