ஊறுபொக்க பிரதேசத்தில், வேறு நபருடன் தகாத உறவு வைத்திருந்த இளம் பெண்ணை, அவரது கணவர் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இச்சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் எரங்கா சந்தமாலி (27) என்ற இளம் பெண் என்று தெரியவந்துள்ளது.

ஊறுபொக்கயில் வாடகைக்கு வீடெடுத்துத் தங்கியிருந்த இத்தம்பதியரிடையே நேற்று இரவு கடும் வாக்குவாதம் மூண்டுள்ளது. சந்தமாலிக்கும் மற்றொருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகக் கூறியே பிரச்சினை தோன்றியுள்ளது.

இதன்போது கடும் கோபத்துக்கு ஆளான சந்தமாலியின் கணவர், அங்கிருந்த மின்சார அடுப்பின் வயரினால் சந்தமாலியின் கழுத்தை இறுக்கி நெரித்துக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தமாலியின் உடல் மாத்தறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.