வவுனியா - ஓமந்தை நொச்சி மோட்டை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கென்டர் ரக வாகனம் ஒன்று நொச்சி மோட்டை பகுதியை அண்மித்த வேளை அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீதும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதுடன் கென்டர் வாகனத்தின் சாரதி  ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.