மட்டக்களப்பு- வெல்லாவௌி பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடை காட்டுப் பகுதியில்   மர்மமான முறையில் உயிரிழிந்த நிலையில் யானை ஒன்று வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள அதிகாரிகளால்  மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த யானை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும், யானை எவ்வாறு உயிரிழந்துள்ளது என்பது தொடர்பான பரிசோதனை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அதன் பின்னரே  இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள பிரதேச சுற்றுவட்டப் பெறுப்பதிகாரி ஏ.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

இப் பிரதேசத்தை அண்டிய தாந்தாமலை  காட்டுப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தினுள் மற்றுமோர் காட்டு யானை மர்மமான முறையில் இறந்ததமை இங்கு குறிப்பிடத்தக்கது.