பெண்ணைக் கடத்தி வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தின் பேரில், யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையைச் சேர்ந்த குற்றவாளியொருவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்ப்பை, யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்தார்.

2011ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும் ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, போதுமான சாட்சியங்களை மன்றில் நெறிப்படுத்த அரச தரப்பு சட்டத்தரணிகள் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.