(நெவில் அன்தனி)
வர்த்தக கால்பந்தாட்ட சங்கம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள வர்த்தக நிறுவன அணிகளுக்கு இடையிலான புட்சால் போட்டி டார்லி வீதி புட்சால் வேர்ல்ட் அரங்கில் சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
இவ் வருடப் போட்டியில் 16 வர்த்தக நிறுவன அணிகள் நான்கு குழுக்களில் பங்குபற்றுகின்றன.
முதலாம் சுற்று லீக் அடிப்படையில் நடத்தப்பட்டு முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் கிண்ணத்திற்கான நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெறும்.
கடந்த வருட சம்பியன் அமானா டக்காபுல் அணி இம்முறை பங்குபற்றவில்லை.
மூன்றாம், நான்காம் இடங்களைப் பெறும் அணிகள் கோப்பைக்கான நொக் அவுட் சுற்றில் விளையாடும்.
பங்குபற்றும் அணிகள்
குழு ஏ: எச்.எஸ்.பி.சி. வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, அமானா வங்கி, எக்ஸ்போ லங்கா ஹொல்டிங்கஸ்.
குழு பி: கலதாரி ஹொட்டெல், டி.எவ்.சி.சி. வங்கி, எஸ்கிமோ பெஷன்ஸ் (புதுவரவு), செலின்கோ இன்சூரன்ஸ்.
குழு சி: ஜோன் கீல்ஸ், ஐ.ரீ.எக்ஸ். 360 (புதுவரவு), ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, வேர்ச்சூசா லிமிட்டெட்.
குழு டி: எல்.பி. பினான்ஸ் (கடந்த வருடம் இரண்டாமிடம்), டபிள்யூ.என்.எஸ். க்ளோபல், சம்பத் வங்கி, கொமர்ஷல். லீசிங்.
கிண்ணம் மற்றும் கோப்பை பிரிவுகளில் முதல் மூன்று இடங்கைளைப் பெறும் அணிகளுக்கு கிண்ணங்கள், பதக்கங்களுடன் பணப் பரிசுகளும் வழங்கப்படும். நான்காம் இடத்தைப் பெறும் அணிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்படும்.
நேர்த்தியான அணிக்கு நினைவுச் சின்னத்துடன் பணப்பரிசும் வழங்கப்படும். இவற்றைவிட அதி சிறந்த வீரர், அதி சிறந்த கோல்காப்பாளர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படும்.
வர்த்தக நிறுவனங்களில் புட்சால் விளையாட்டைப் பிரபல்யப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டதாக வர்த்தக கால்பந்தாட்ட சங்கத் தலைவர் இயூசுப் சய்ப் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM