ஆயுர்வேத ‘மஸாஜ்’ நிலையம் என்ற பெயரில், நாவலயில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று நேற்று (18) மிரிஹான பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. 

இந்தச் சுற்றிவளைப்பின்போது, பதினெட்டுப் பெண்களும் அவர்களைப் பாலியல் தொழிலில் இணைப்பதற்கு உதவியாக இருந்த இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 19 முதல் அறுபத்து நான்கு வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றில் உடனடி தேடுதல் ஆணையைப் பெற்றே பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.