பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட மாலக்க சில்வா இன்று நீதிமன்றில் சரணடைந்தார். இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட பிடியாணை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

கேளிக்கை விடுதியொன்றில் ஸ்கொட்லாந்து தம்பதியரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மாலக்க சில்வா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சமுகமளிக்காததையடுத்தே அவர் மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (19) காலை நீதிமன்றில் சரணடைந்த அவர், உடல் நிலைப் பிரச்சினைகளாலேயே விசாரணைக்கு சமுகமளிக்க முடியாமல் போனதாகக் கூறி, அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் நீதிமன்றில் கையளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.