எதிர்வரும் 3 ஆண்டுகளில் ஆட்கடத்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு 183 மில்லியன் ரூபாவை (1.2 மில்லியன்  அமெரிக்க டொலர் ) வழங்கவுள்ளது. 

இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார அலுவலகத்தினால் இலங்கையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு இந்த நிதித் தொகை  வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிகக் தூதுவர் அதுல் கெசப் தெரிவிக்கையில்,

“நவீன அடிமைத்தனத்தின் அடிப்படைக் காரணங்களைக் கையாளுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேசப் பங்காளரக்ளுடன் பணியாற்றுவதற்கு ஐக்கிய அரசுகள் பலமான அர்ப்பணிப்பு கொண்டுள்ளதுடன் இந்த முயற்சியை வரவேற்கின்றேன்.

இந்த வசதிப்படுத்தல் கருத்திட்டம் மூலமாக ஆட்கடத்தல் சம்பவங்களுடன் போராடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு நாம் ஆதரவளிப்பதைத் தொடருவோமென அவர் தெரிவித்தார்.   

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் சிம்றின் சிங் தெரிவிக்கையில்,

 

ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் இறங்குவதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திற்கும் இலங்கைக்குமான ஒரு சரியான நேரத் தலையீடு இதுவாகும்.

கட்டாயவேலை மீதான ILO சமவாயம் மற்றும் மரபொழுங்குகளின் சிபார்சுகளின் பிரயோகம் மற்றும் நியாயமான ஆட்சேர்ப்பு மீதான நன்கு அறியப்பட்ட ILO கருவிகள் என்பன தேசிய மற்றும்  அடிமட்ட மட்டங்களில் உள்ள சவால்களை கையாளுவதில் ஒரு சாதகமான குறைப்பை ஏற்படுத்தும்.   

இந்த வசதிப்படுத்தல் திட்டமானது இடரில் உள்ள ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் மற்றும்  ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக  உதவும். இந்தக் கருத்திட்டமானது இடையீட்டின் தாக்கத்தைப் பெருப்பிப்பதற்கும் நீடித்து நிலைக்கும் மாறற்த்தை சாதித்துக்கொள்வதற்காகவும் மாற்றத்திற்கான கொள்கை வகுப்பாளர்கள் சட்ட அமுலாக்கல், ஆட்சேர்ப்பு முகவராலயங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் போன்ற மாற்றத்திற்கான முகவராலயங்களுடன் நெருக்கமாக ஈடுபடுமென அவர் மேலும் தெரிவித்தார்.