இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டு மலர்ச்சாலையிலுள்ள சவச்சாலையில் 15 மணித்தியாலங்கள் –-12 பாகை செல்சியஸ் அளவான உறையவைக்கும் குளிரில் வைக்கப்பட்டிருந்த ஒரு மாதக் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு முன் விழிதெழுந்த அதிசய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஸெஜியாங் மாகாணத்தில் ஜின்ஹுவா நகரிலுள்ள பானன் பொது மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஆன் ஆன் என அழைக்கப்படும் இந்தக் குழந்தை கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி உள்ளூர் மருத்துவமனையொன்றில் குறைப் பிரசவத்தில் பிறந்தது. பிறந்த போது அந்தக் குழந்தையின் நிறை 49 அவுன்ஸ் மட்டுமேயாகும்.
இந்நிலையில் மருத்துவமனையிலுள்ள உயிர்காப்பு உபகரணத்தில் 23 நாட்களைக் கழித்த அந்தக் குழந்தை யின் உடல் நலம் திடீரென மோசமடைந்ததையடுத்து அது கடந்த 4 ஆம் திகதி வியாழக்கிழமை மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டது.
அந்தக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அது மாரடைப்புக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாக அறிவிப்புச் செய்தனர்.
மருத்துவர்கள் அந்தக் குழந்தைக்கான மரணச்சான்றிதழை வழங்கியதையடுத்து அதன் தந்தையான லு தனது குழந்தையை துணியால் சுற்றி பிளாஸ்டிக் பையொன்றில் வைத்து பன்னன் மலர்ச்சாலைக்கு கொண்டு சென்றார்.
தொடர்ந்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அங்குள்ள சவச்சாலையில் அந்தக் குழந்தை உறை குளிரில் வைக்கப்பட்டது.
இதனையடுத்து சுமார் 1,000 யுவான் செலவில் குழந்தையை தக னம் செய்வதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.
இந்நிலையில் மறுநாள் காலை 9.00 மணிக்கு மேற்படி குழந்தை அழுவதை அந்த சவச்சாலையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் செவிமடுத்து அதிர்ச்சியடைந்து அது தொடர்பில் மலர்ச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தக் குழந்தை தற்போது அவசர சிகிச்சைப் பிரி வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM