முத்­த­ரப்பு தொடரில் சிம்­பாப்வே அணி­யு­ட­னான போட்­டியில் தோல்வி­ய­டைந்த இலங்கை அணி தனது இரண்­டாவது போட்­டியில் இன்று பங்­க­ளாதேஷ் அணியை  எதிர்­கொள்­கி­றது.

பங்­க­ளாதேஷ் – சிம்­பாப்வே – இலங்கை ஆகிய மூன்று அணிகள் மோதி­வரும் முத்­த­ரப்பு ஒருநாள் தொடர் பங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­வ­ரு­கி­றது. 

இந்தத் தொடரில் இலங்கை அணி நேற்­று­முன்­தினம் சிம்­பாப்­வேயை எதிர்த்­தா­டி­யது. இந்தப் போட்­டியில் இலங்கை அணி 12 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­வி­யது. இந்­நி­லையில் இன்று பங்­க­ளா­தேஷை இலங்கை எதிர்­கொள்­கி­றது.

அதிலும் பங்­க­ள­ாதேஷின் முன்னாள் பயிற்­சி­ய­ாள­ரான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க தற்­போது இலங்­கையின் பயிற்­சி­யாளர் பொறுப்பை ஏற்றுள்ளதால் இந்தப் போட்டி நிச்சயமாக இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமைய வுள்ளது. இன்றைய போட்டி இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமா கும்.