திரு­கோ­ண­ம­லையில், காலஞ்­சென்ற பிர­பல வர்த்­தகர் ஒரு­வரின் மகன் மர்ம நபர்­களால் கடத்­தப்­பட்டு 25 இலட்சம் ரூபா கப்பம் பெறப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­பட்ட சம்­ப­வத்தின் பின்­ன­ணியில், போம்ப கபி­லவின் மனைவி இனோ­காவும், ஹப­ரண ரஞ்­ஜியின் குழு­வி­ன­ருக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். 

இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற தக­வல்­களை மையப்­ப­டுத்தி கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜய­சே­கர, திரு­மலை பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ஆர்.எம்.ஜி.ஓ. பெரேரா ஆகி­யோரின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர்  ஏ.பி.ஜே. சந்­ர­கு­மா­ரவின் வழிநடத்­தலில் திரு­மலை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

இந்தக் கடத்தல், கப்பம் பெற்ற சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் பெண் ஒருவர் உள்­ளிட்ட மூவரின் படங்கள் அடங்­கிய சி.சி.ரி.வி. காணொ­ளி­களும் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில் அவர்­களைக் கைது செய்ய உத­வு­மாறு பொலிஸார் பொது மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் திரு­மலை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு 0718591174, 0262222227 எனும் தொலை­பேசி இலக்­கத்­துக்கோ அல்­லது 026 2222222 எனும் பொலிஸ் நிலைய தொலை­பேசி இலக்­கத்­துக்கோ தகவல் தரு­மாறு பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

திரு­மலை, நான்காம் மைல்கல் பகு­தியைச் சேர்ந்த  23 வய­தான வாலிபர், கடந்த 5 ஆம் திகதி மாலை  தனது காத­லியைச் சந்­தித்­து­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போதே கடத்திச் செல்­லப்­பட்­டி­ருந்தார். குறித்த இளை­ஞரின் தந்தை, திரு­ம­லையில் பிர­பல வர்த்­த­க­ராவார். சில வரு­டங்­க­ளுக்கு முன் அவர் சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருந்தார். இளை­ஞரின் தாய்க்கு கடந்த ஐந்தாம் திகதி இரவு கிடைத்த தொலை­பேசி அழைப்பில், இளை­ஞரின் தந்தை பற்­றிய சில விப­ரங்­களைக் கேட்டுத் தெரிந்­து­கொள்­வ­தற்­கா­கவே இளை­ஞரைக் கடத்­தி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கடத்தல் விவ­காரம் குறித்து பொலி­ஸா­ருக்குத் தெரி­விக்கக்கூடாது என்றும் தொலை­பேசி அழைப்பில் கூறப்­பட்­டுள்­ளது. எனினும் இளை­ஞரின் தாய் திரு­கோ­ண­மலை பொலிஸில் தமது மகன் கடத்­தப்­பட்­டமை குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்­ப­டை­யி­லேயே பொலிஸார் தேடுதல் நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தனர். 

கடத்­தப்­பட்ட இளைஞன், கடந்த 8 ஆம் திகதி மாலை  கம்­பஹா, யக்­கல - மிரிஸ்­வத்தை பகு­தியில் வைத்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் அவர் இவ்­வாறு மீட்­கப்பட்­டுள்­ள­தா­கவும், கடத்தல் முறைப்­பாடு தொடர்பில் திரு­மலை பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதால் அவரை திரு­கோ­ண­ம­லைக்கு  அழைத்துச் சென்று ஒப்­ப­டைத்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். இதுதொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை திரு­மலை பொலிஸார் முன்­னெ­டுத்த நிலையில், குறித்த இளைஞன் 25 இலட்சம் ரூபா கப்பம் பெறப்­பட்­டதன் பின்­ன­ரேயே விடு­விக்­கப்பட்­டுள்­ள­மையை கண்­ட­றிந்­துள்­ளனர். இது தொடர்பில் குறித்த இளைஞன் சரி­யான வாக்கு மூலங்­களை பொலி­ஸா­ருக்கு வழங்­காத நிலையில் கப்பம் பெற்­றவர்களைக் கண்­ட­றிய பொலி ஸார் தீவிர விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர். திரு­மலை ஐஸ் மஞ்சு எனும் பாதாள உலக தலை­வ­னினால் கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் மற்­றொரு பாதாள உலக தலை­வ­னான கபில போம்ப என்­ப­வரின் மனை­வி­யான இனோக்­காவும், ஹப­ரன ரஞ்சி எனும் பாதாள உலக தலை­வனும் இணைந்து இக்­க­டத்­தலை முன்னெடுத்திருக்கலாம் எனவும் அதற்கான சில ஆதாரங்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் கிழக்கு பிராந்திய பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. 

இந் நிலையிலேயே அது தொடர்பில் தீவிர அவதானம்  செலுத்தப்பட்டு கிடைக்கப் பெற்றுள்ள சான்றுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.