திரு­ம­ணத்தின்போது மேடையில் மாயமாய் மறைந்து மீண்டும் தோன்­றிய மண­மக்­களின் செய்­கையால் உற­வி­னர்கள் ஆச்­ச­ரி­ய­ம­டைந்துள்ளனர்.

கேர­ளாவை சேர்ந்­த அம்மு என்­பவர் மந்­திர வித்­தையில் திறமை வாய்ந்­தவர் . இவ­ருக்கும் ஆனந்த என்­ப­வ­ருக்கும் கடந்த 4ஆம் திகதி ஆலப்­பு­ழாவில் திரு­மணம் நடை­பெற்­றது.

இந்­நி­லையில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மந்­திரவித்தை செய்­து­காட்ட விரும்பிய அம்மு மேடையில் இருக்­கும்­போது தன் கண வரோடு மறைந்­து­போயுள் ளார். அவரை காணாமல் உற­வி­னர்கள் திகைத்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது திடீ­ரென மேடையில் இருந்த கண்­ணாடி அறையில் இருந்து வெளியில் வந்தார்.

உட­ன­டி­யாக உற­வி­னர்கள் உற்­சாக கோஷம் எழுப்­பினர். மேலும் தனது கண­வரை மிகப்­பெ­ரிய தாமரை பூவில் இருந்து வர செய்தார். இதனால் வந்­தி­ருந்த உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்கள் அனை­வரும் அதி­ச­யத்தில் உறைந்­து­போ­யினர். இது தொடர்­பாக அம்மு கூறி­ய­தா­வது, எனது திரு­மணம் நடை­பெற்ற முறை எனக்கு மகிழ்ச்சி அளிக்­கி­றது. இது எனது தந்தையின் யோசனை. இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்.