சாதாரண பெண்களின் முகங்களை நிர்வாணப் பெண்களின் உடல்களில் பொருத்தி, அவற்றை சமூக வலைதளங்களில் பல வருட காலமாகப் பதிவேற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படங்களைக் காட்டி பயமுறுத்தி பணம், நகை, பாலுறவு என்பனவற்றை இவர் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

கொஸ்வத்த, ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இந்த 35 வயதுடைய நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கையடக்கத் தொலைபேசி, புகைப்படங்களை பதிவேற்றும் சமூக வலைதளம் மற்றும் இவரது முகநூல் கணக்கு என்பனவற்றையும் பொலிஸார் தம்வசப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.