உலகின் 10ஆவது சிறந்த கையடக்க தொலைபேசி தயாரிப்பாளரும், இலங்கையில் பெருமளவு கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனமுமான Micromax Informatics லிமிட்டெட், அண்மையில் Canvas Express கையடக்க தொலைபேசிகளை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது. 

இந்த புதிய 3G ஸ்மார்ட்ஃபோன் வலிமையான புரொசெசர் மற்றும் புத்தாக்கமான உள்ளம்சங்களையும் கொண்டுள்ளதுடன், உள்நாட்டு ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் தலைமைத்துவமான நிலையை எய்துவது எனும் Micromax இன் அர்ப்பணிப்பான செயற்பாட்டை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

பல்-செயற்பாடுகளை மேற்கொள்ளும் சாதனங்கள், 24x7 டேடா இணைப்பு மற்றும் real-time mobility தீர்வுகளை பெருமளவில் நாடும் நுகர்வோரை இலக்காக கொண்டமைந்துள்ள Canvas Express ஸ்மார்ட்ஃபோன், 1.4 GHz Octa Core புரொசெசர், 13 MP கமரா, 5 அங்குல HD IPS திரை, Wifi, Bluetooth V 4.0  மற்றும் மேலும் பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

இலங்கையில் Micromax தொலைபேசிகளை விநியோகிப்பதற்கான ஏக விநியோகஸ்த்தராக திகழும் மெட்ரொபொலிடன் டெலிகொம் சேர்விசஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சஞ்சீவ் ஆரியரட்னம் கருத்து தெரிவிக்கையில்,

“வர்த்தக நாமம் எனும் வகையில், Micromax தனது புத்தாக்கமான மற்றும் சகாயமான பொருட்கள் மூலமாக, எப்போதும் ஸ்மார்ட்ஃபோன் கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இலங்கையில் Canvas Express ஐ அறிமுகம் செய்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் நுகர்வோருக்கு சிறந்த பயன்தரும் சாதனமாக இது அமைந்திருக்கும் என நாம் நம்புகிறோம்” என்றார். 

இந்த அறிமுகத்துக்கு மேலாக, இந்த ஸ்மார்ட்ஃபோனை Wow.lk இலிருந்து கொள்வனவு செய்து கொள்ள முடியும். விற்பனை மற்றும் வியாபார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் நரேஷ் சதாசிவம் “எமது வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான தயாரிப்புகளை வழங்கும் வகையில் Micromax உடன் கைகோர்த்துள்ளமையையிட்டு பெருமையடைகிறோம்.

இலங்கையில் e- வணிக புத்தாக்க செயற்பாடுகளில் Wow.lk முன்னிலையில் திகழ்கிறது. வாடிக்கையாளர்களுக்கு புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நாமங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. நாட்டின் முன்னணி ஒன்லைன் இணையத்தளங்களினூடாக Canvas Express விற்பனையாகின்றமை e-வணிக செயற்பாடுகளுக்கு கௌரவிப்பை வழங்குவதாக அமைந்துள்ளது” என்றார். 

2015 நவம்பர் 4ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் நம்பமுடியாத 16,490 ரூபா எனும் விலையில் Micromax Canvas Express தரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் Micromax சர்வதேச வியாபாரங்களுக்கான பொது முகாமையாளர் சவியோ மென்டொன்சா கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக அமைந்துள்ளது. உள்நாட்டு ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் அதிகளவு வளர்ச்சி வாய்ப்பை நாம் கொண்டுள்ளது. எமது சர்வதேச ரீதியில் காணப்படும் சிறந்த கையடக்க தொலைபேசிகளை அறிமுகம் செய்வதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன், இதற்கமைவாக புதிய Canvas Express  ஸ்மார்ட்ஃபோன் தலைமுறையின் வெவ்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.

Canvas Express இல் உள்ளடங்கியுள்ள விசேட உள்ளம்சங்களில், அழகிய அலங்கார வடிவமைப்புகளும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. jet black finish உடன் gold rim மற்றும் narrow bezel ஆகியன அடங்கியுள்ளன. ஸ்மார்ட்ஃபோனின் 5 அங்குல HD IPS திரை Corning Gorilla Glass 3 ஐ கொண்டுள்ளது.

சேதங்கள் ஏற்படுவதை குறைக்கும் வகையில், சிறந்த அலங்கார தரத்தையும் கடுமையான மற்றும் வெவ்வேறு vivid colour களையும் கொண்டுள்ளது. முக்கியமாக இது மிகவும் வலிமையானதாகவும், shatter proof  மற்றும் scratch-resistant ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Canvas Express இல் காணப்படும் ultra-fast 1.4 GHz Octa-Core புரொசெசர், 1GB LPDDR3 RAM, 8GB ROM ஆகியவற்றின் மூலமாக உயர்ந்த வினைத்திறன் வழங்கப்படுகின்றன. அதிகளவு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு மிருதுவான கையாள்கையையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

Android KitKat 4.4.2 இல் இயங்குவதுடன், விரைவில் Android Lollipop 5.0 க்கு மெருகேற்றம் செய்து கொள்ளவும் முடியும்.ஸ்மார்ட்ஃபோனின் மெல்லிய கட்டமைப்பில் 2500 mAh திறன் வாய்ந்த பற்றரி அடங்கியுள்ளது, இதன் மூலமாக 9.5 மணித்தியாலங்கள் உரையாடக்கூடிய காலமும், 393 மணித்தியாலங்கள் standby இல் காணப்படும் திறனும் கொண்டுள்ளது.

இசை விரும்பிகளுக்கு சிறந்த தீர்வாகவும் அமைந்திருக்கும்.Cirrus Logic Wolfson Stereo DAC  உடன் இது அமைந்துள்ளதுடன், கீழ்ப்புற ஸ்பீக்கர்கள் மூலமாக non-muffled ஒலியும் உறுதி செய்யப்படுகிறது, புதிய Canvas Express இன் மூலமாக இது வரை காலமும் பெற்றிராத புகைப்பட அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்ஃபோன் 13 MP AF கமராவுடன் OV sensor ஐயும் கொண்டுள்ளதுடன், 5P Largan Lens மற்றும் Blue Glass Filter ஐயும் கொண்டுள்ளது. இவற்றின் மூலமாக வினைத்திறன் வாய்ந்த படங்களை எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். செல்ஃபி ஆர்வலர்களுக்காக முன்புற கமரா 2MP FF திறனையும் OV sensor மற்றும் panorama mode ஐயும் கொண்டுள்ளது.

Micromax Canvas Express இன் விலை ரூ. 16490ஃ- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக றழற.டம எனும் இணையத்தளத்தினூடாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் காணப்படும் மெட்ரொபொலிடன் விநியோகஸ்த்தர் மற்றும் காட்சியறைகளிலும் அறிமுகம் செய்யப்படும்.