பாடசாலையை சீக்கிரம் மூடுவதற்காக முதலாம் வகுப்புச் சிறுவனை கத்தியால் கத்திய ஆறாம் வகுப்பு மாணவியை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

லக்னோவில், நேற்று (17) பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியை அழைப்பதாகக் கூறி அக்கா ஒருவர் தன்னை அழைத்துக்கொண்டு கழிவறைக்குச் சென்றதாகவும் அங்கு வைத்து அக்கா தன்னை அறைந்ததாகவும் பின்னர் கூரிய ஆயுதத்தால் (காய்கறி வெட்டும் கத்தி) குத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

பாடசாலையை நேரத்துடன் மூடுவதற்காகவே தன்னை அடிப்பதாகவும் அந்த அக்கா கூறியதாக அவன் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். புகைப்படத்தின் உதவியுடன் தன்னைத் தாக்கிய சிறுமியை ஷர்மா அடையாளம் காட்டியுள்ளான். 

அவனது உடலில் இருந்த முடியை மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் சிறுமியின் மரபணுவுடன் ஒத்தும்போகும் பட்சத்தில் சிறுவர்களுக்கான நீதிச் சபையில் சிறுமியை நிறுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி சம்பவத்துக்குப் பொறுப்பாளி எனக் கூறி, பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.