பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்து வரும் தனிமையை சமாளிக்கும் வகையில்  கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிரேசி குரோச்சை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேற்று நியமித்துள்ளார்.

தனிமை என்பது உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பாதிக்குமொன்றாகும். தனிமை என்பது 15 சிகரெட்டுகளை புகைப்பதனால் ஏற்படும் தீங்கிற்கு சமமானதாகும் என்றும் தனிமைப் பிரச்சினையினால் பிரித்தானியாவில் சுமார் 9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கொக்ஸினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்றின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்படி தனிமையைத் தடுப்பதற்கான ஒரு தேசிய மூலோபாயத்தை உருவாக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதற்கமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு,

தனிமை என்பது 15 சிகரெட்டுகளை புகைப்பதனால் ஏற்படும் தீங்கிற்கு சமமானது