முந்தைய அதிபர்களைப் போல் உடற்பயிற்சிக் கூடத்தில் நேரத்தைச் செலவழிக்க நான் விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமாக இருந்தாலும் கூட ட்ரம்ப் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் உணவுக்கட்டுப்பாட்டைப்  பின்பற்ற வேண்டும் என வெள்ளை மாளிகை வைத்தியர் டாக்டர் ரோனி ஜாக்சன் பரிந்துரைக்கே ட்ரம்ப் இவ்வாறு தரிவித்துள்ளார்.

“நான் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சிக் கூடத்தில் 2 மணி நேரமாக பயிற்சி செய்தார்கள். ஆனால் 55 வயதில் புதிய முட்டி மாற்றினார்கள். புதிய வயிற்றை மாற்றினார்கள். எனக்கு அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. நான் நல்ல ஆரோக்கியத்தோடு வலிமையாக இருக்கிறேன். மருத்துவர் கூறுவது போல் வெள்ளை மாளிகையில் வழங்கப்படும் உணவின் அளவை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன்” என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

70 வயதான டிரம்ப் தற்போது 6 அடி 3 அங்குலம் உயரமும், 108 கிலோ எடையும் கொண்டிருக்கிறார். வெள்ளை மாளிகை மருத்துவரின் அறிக்கையின் படி டிரம்ப் அதிக எடையுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.