முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவைக் கைது செய்யும்படி நீதிமன்றம் பிடியாணை விடுத்துள்ளது.

களியாட்ட விடுதியொன்றில், வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் மீது மாலக்க சில்வா தாக்குதல் நடத்தியதாக கடந்த 2014ஆம் ஆண்டு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் சமுகமளிக்கத் தவறியதையடுத்தே அவருக்கு பிடியாணை பிறப்பித்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.