ஐந்து ஆண்டுகளில், சுமார் 350 பில்லியன் டொலர் செலவில் (ஏறக்குறைய 56 இலட்சம் கோடி ரூபா!) தமது புதிய வளாகம் ஒன்றை அமெரிக்காவில் நிர்மாணிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டில் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை நாட்டுக்குள் கொண்டுவர வழிசெய்யும் வகையில், ட்ரம்ப் அரசு புதிய வரித் திட்டத்தை கடந்த வருடம் அமுல்படுத்தியது. இதையடுத்தே ஆப்பிள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வரியாக மட்டும் சுமார் 38 பில்லியன் டொலர்களை அமெரிக்காவுக்குச் செலுத்தவுள்ளது ஆப்பிள். இதை அமெரிக்க அரசும் வரவேற்றுள்ளது. புதிய வரிக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் செலுத்தப்படும் அதிகூடிய வரி இது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்பிளின் புதிய திட்டத்தின் மூலம் சுமார் இருபதாயிரம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன. இதற்கான பணத்தை உலகெங்கும் இயங்கும் தனது நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

குறித்த வளாகம் எங்கு, எந்த வடிவில் அமையவுள்ளது என்பது பற்றிய விபரங்களை இவ்வருட இறுதியில் வெளியிடவுள்ளதாகவும் ஆப்பிள் அறிவித்துள்ளது.

மென்பொருட்களை அமெரிக்காவில் தயாரித்து வந்தாலும் ஆப்பிளின் உபகரணங்கள் அனைத்தும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலேயே உற்பத்தியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.