பொலிஸ் சேவையின் சிரேஷ்ட பதவிகளாக கருதப்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி.) பதவிகளுக்கும்  பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி.) பதவிகளுக்கும்  பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் சேவையின் உயர் அதிகாரிகளுக்கும், சுயாதீன பொலிஸ் ஆணைக் குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில்  இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பதவி வரையில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகின்றது. ஆண்-பெண் பொலிஸாரைத் தெரிவுசெய்யும் நடைமுறையில் உள்ள வித்தியாசங்களாலேயே இந்த நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடைந்தால், தேர்தலின் பின் பெண் பொலிஸாருக்கும் உயர்பதவி வழங்கப்படலாம் எனத் தெரியவருகிறது.