ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பிணைமுறி விசாரணை அறிக்கையை ஆராய்ந்து கட்சியின் செயற்குழுவுக்கு அறிக்கை  சமர்ப்பிக்குமாறு கூறி, மூன்று பேர் கொண்ட குழுவை ஐ.தே.க. நியமித்துள்ளது.

இத்தகவலை, அக்கட்சியின் செயலாளர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் கடந்த 30ஆம் திகதி கையளிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணை அறிக்கை இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வறிக்கையில், ஆணைக்குழுவில் தவறான தகவல் அளித்ததன் பேரில், ஐ.தே.க. சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.