வாடகைக்குப் பெற்ற வேன் ஒன்றை அடகு வைத்துப் பணம் பெற முயன்ற இருவரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்கள் இருவரும் தலவாக்கலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மத்துகமயைச் சேர்ந்த இவ்விருவரும் ஒரு மாதத்துக்கு முன், ஜா-எலையில், வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் இருந்து குறித்த வேனை வாடகை அடிப்படையில் பெற்றுள்ளனர்.
அதே வேனை, தலவாக்கலை பகுதியில் உள்ள ஒரு வியாபாரியிடம் அடகு வைக்க அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி, குறித்த வியாபாரியிடம் தொலைபேசி மூலம் பேரம் பேசிய அவர்கள், 80 இலட்ச ரூபா பெறுமதியான வேனை அவசர தேவைக்காக 35 இலட்சங்களுக்கு அடகு வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வேன் குறித்த போலிப் பத்திரங்களை வியாபாரியிடம் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் செல்வதற்காக வேனை தலவாக்கலைக்குச் செலுத்தினர்.
அதன்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், போலி வாகனப் பத்திரங்களைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே உண்மை வெளிவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM