ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணிகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக குறித்த இல்லத்தை நினைவு இல்லமாக்குவதற்கான ஆய்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று  ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அன்புச்செழியன் மேற்படி தெரிவித்துள்ளார்.

"அண்மையில் வீட்டின் அளவுகள் கணிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய பணிகளை முன்னெடுத்துள்ளோம். ஜெயலலிதாவிற்கு நேரடி வாரிசு என்று எவரும் கிடையாது. அப்படி யாரும் இருப்பின் நினைவு இல்லமாக்கும் பணிகள் கைவிடப்படும்" என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தீபா மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் எனக்கூறி தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.