பெங்களூரு ‘மெட்ரோ’ ரயில் சாரதிகளாகப் பணியாற்றும் இளம் பெண்கள் சிலர், பொலிஸில் வித்தியாசமான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

இவ்விளம்பெண்கள் பையனஹப்பள்ளியில் உள்ள பெங்களூரு ரயில்வேக்குச் சொந்தமான அடுக்கு மாடி விடுதிகளில் தங்கியுள்ளனர்.

கடந்த பதினோராம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில், தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் தூக்கம் கலைந்து எழுந்தார். அப்போது, அறையில் நபர் ஒருவர் கையில் கத்தியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர், அருகில் தூங்கிக்கொண்டிருந்த தோழியைத் தட்டியெழுப்பினார்.

துணிச்சலை வரவழைத்துக்கொண்ட அந்தப் பெண், “யார் நீ?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், தான் ஒரு திருடன் என்றும் தமது குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளார். 

சில நிமிடங்களில் அந்த அறையை விட்டு வெளியேறிய அந்த நபர், கொடியில் காய்ந்துகொண்டிருந்த உள்ளாடைகள் சிலவற்றைக் காட்டி, அவை அவர்களுடையனவா என்று கேட்டபடியே அவற்றை மோப்பம் பிடித்துள்ளார்.

பின்னர், அவர்களது பதிலுக்காகக் காத்திராமல், அவ்வுள்ளாடைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.

இவ்வாறு அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் ‘விசாரணை’ மேற்கொண்டு வருகின்றனர்.