முடி உதிர்வுக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பயன்படுத்தும் மருந்தின் பக்க விளைவுகள் பற்றிய உறுதியான ஆய்வறிக்கை ஒன்று அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தலைமுடி உதிர்வைத் தடுப்பதற்காக ‘ஃபைனஸ்டரைட்’ என்ற மருந்தை ட்ரம்ப் பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இந்த மருந்தைப் பயன்படுத்துவோர் என்னென்ன பக்க விளைவுகளுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை கடந்த மே மாதம் வெளியான மருத்துவ ஆய்வறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கனடாவின் ஒன்டாரியோவில் இயங்கிவரும் ‘வெஸ்டர்ன் பல்கலைக்கழகமே இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தது.

அது வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், இந்த மருந்தைப் பயன்படுத்துபவர்களின் தலைமுடி உதிர்வு தடுக்கப்படும் என்றாலும் மன நலனைக் கடுமையாக பாதிக்கும் என்றும் தற்கொலை முடிவுகளை நோக்கித் தள்ளும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேவேளை, நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக இந்த மருந்தைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் ஆண்மையிழப்புக்கு ஆளாவார்கள் என்பதையும் மற்றொரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை உறுதிசெய்துள்ளது.

எனினும் மருத்துவ ரீதியான பரிசோதனையில் ட்ரம்ப் பூரண குணத்துடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆண்களின் சிறுநீரகப் பிரச்சினைக்காகவே ஃபைனஸ்டரைட் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பக்கவிளைவாக முடி உதிர்வது தடுக்கப்படுகிறது என்ற உண்மை 1997ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது.