தும்மலைத் தடுக்க முயன்றால் என்ன நடக்கும் என்பதற்கு அதிர்ச்சி தரும் மருத்துவ ரீதியான உதாரணம் ஒன்றை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தும்மல் வரும்போது தடுத்தால் என்ன நடக்கும் என்று சோதித்துப் பார்க்க 34 வயது நபர் ஒருவர் நினைத்தார். அவரது விளையாட்டு வினையானதுதான் மிச்சம்!

சரியாக, தும்மல் வரும்போது அவர் தனது வாயையும் மூக்கையும் இறுக மூடிக் கொண்டாராம். இதனால் தும்மல் வெளியேற இடமின்றி, குரல்வளையைத் துளைத்துக்கொண்டு வெளியேறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரல்வளையில் துளை ஏற்பட்ட நிலையில், பேசவோ அல்லது எச்சிலைக் கூட விழுங்கவோ முடியாத நிலையில் அவர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளார்.

சிகிச்சை முடியும் வரை குழாய் வழியாக உணவையும் நீரையும் அவருக்கு வழங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், சுமார் ஒரு வார காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை முடிந்து வீடு திரும்ப நேர்ந்ததாகக் கூறிய மருத்துவர்கள், இதுபோன்ற முயற்சிகள் மரணத்தையும் விளைவிக்கக் கூடியன என்றும் எச்சரித்துள்ளனர்.