ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்ட  நால்­வ­ருக்கு உயிர் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­னவின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. 

Image result for 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் வழக்கு

இந்த விவ­கா­ரத்தில் பிர­தான சாட்­சி­யா­ளர்­க­ளான லெப்­டினன் கொமாண்டர் வெல்­கெ­தர, கடற்­படை முன்னாள் சிப்பாய் அளுத்­கெ­தர உபுல் பண்­டார, பிர­தான விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா மற்றும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க அவர்கள் சார்பில் ஆஜ­ராகி வந்த சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன ஆகி­யோ­ருக்கே இந்த உயிர் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இதில் பிர­தான விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்­வாவை கொலை  செய்ய சதித் திட்டம் தீட்­டி­யமை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் திஸா­ந­யக்க தலை­மை­யி­லான பொலிஸ் குழுவும், சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்­ன­வுக்கு தொலை­பே­சியில் அச்­சு­றுத்தல் விடுத்த சம்­பவம் தொடர்பில் வாழைத் தோட்டம் பொலி­ஸாரும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில் அது தொடர்பில் இரு வேறு வழக்­குகள் புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன் போது நீதி­வா­னுக்கு அறி­விக்­கப்­பட்­டது. 

இந் நிலையில் தனி­யாக இடம்­பெறும் விசா­ர­ணை­களை அவ்­வாறே தொடர ஆலோ­சனை வழங்­கிய நீதிவான் சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் தொடர்பில், பதி­வா­கி­யுள்ள பொலிஸ் நிலை­யங்கள் ஊடாக 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க  பாதிக்­கப்­பட்டோர், சாட்­சி­யா­ளர்கள் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் பிர­காரம் விசா­ரணை செய்து சந்­தேக நபர்­களை வெளிப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு எதி­ராக   நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கினார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு  5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்ப்ட்டு காணாமல் போகச் செய்­யப்ப்ட்ட சம்­பவம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜய­ரத்ன முன்­னி­லையில் மீளவும் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போதே பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் நேற்று மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜே.சி. வெலி அமு­னவின் கருத்­து­ரையை செவி­ம­டுத்து நீதிவான் இந்த ஆலோ­ச­னையை வழங்­கினார். அத்­துடன்  இந்த விவ­கா­ரத்தில் தற்­போது கைது செய்­யப்­ப­டு­வ­தற்­காக தேடப்­பட்டு வரும் கடற்­ப­டையின் லெப்­டினன் கொமாண்டர் சந்­தன பிரசாத் ஹெட்டி ஆரச்­சியைக் கைது செய்ய சர்­வ­தேச பொலிஸார் ஊடாக சிங்­களம், ஆங்­கில மொழி­களில் பகி­ரங்க பிடி­யா­ணையும் நீதிவான்  பிறப்­பித்தார்.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­த­தி­ருந்­தது.

சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் நேரடி  கட்­டுப்­பாட்டில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசேரா, புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். 

இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் எனும்  தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்ப்ட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­ன­ய­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர். 

இந்த விடயம் சர்­வ­தேச அளவில் அவ­தா­னிப்­புக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில், சிறப்பு புல­னாய்வு பிரிவின் பொறுப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சி­ய­வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன் கொமாண்டர் தரத்­தினை உடைய தற்­போது கொமாண்­ட­ராக பதவி உயர்த்­தப்­பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார,  நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ , கித்­சிரி மற்றும் சிறப்பு புல­னாய்வு பிரிவின் பணிப்­பா­ள­ரா­கவும் கடற்­படை ஊடகப் பேச்­சா­ள­ரா­கவும் அப்­போது பதவி வகித்த கொமாண்டர் டி.கெ.பி. தஸ­நா­யக்க ஆகியோர் கைது பிணையில் உள்ள நிலையில் நேற்று அவர்கள் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

 நேற்று முன் தினம் கைது செய்­யப்­பட்ட கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் வீர­ரான கஸ்­தூ­ரிகே காமினி குற்றப் புல­ன­யவுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளான நிசாந்த சில்வா, இலங்­க­சிங்க ஆகி­யோரால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதன்­போது மன்றில் கருத்து முன்­வைத்த பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, 

காணாமல் போன­வர்­களில் அடங்கும் அலி அன்வர் ஹாஜியார் என்­ப­வரை இந்த காமினி என்ற சந்­தேக நபரே, கட்­டு­நா­யக்­கவில் இருந்து தெஹி­வ­ளைக்கு முச்­சக்­கர வண்­டியில் வரும் போது கடத்திச் சென்­றுள்ளார்.

 அத்­துடன் பிர­தான சாட்­சி­யான வெல­கெ­த­ரவின் சாட்­சிக்கு அமை­வாக, 2009 ஜூன் முற்­ப­கு­தியில் கன்சைட் வளா­கத்தில் கறுப்பு பொலித்­தீ­னினால் சுற்­றப்­பட்ட  சட­லங்­களை  என சந்­தே­கிக்­கப்­ப­டு­வன்­வற்றை இவரே கெப் வாக­னத்தில் ஏற்­றி­யுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப் பெற்­றுள்ள சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே  நியா­ய­மான சந்­தே­கத்தின் பேரில் அவரைக் கைது செய்தோம்.  என்றார்.

 இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் வழை­மை­யாக ஆஜ­ராகும் சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்­ன­வுடன் மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜே.சி. வெலி அமுன, குறிப்­பி­டு­கையில் 

 ,  இந்த வழக்கின் விசா­ர­ணை­க­ளுக்கு பாரிய இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இதனை இப்­ப­டியே தொடர விட முடி­யாது. இவ்­வ­ழக்கில் பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் ஆஜ­ரான எனது கனிஷ்ட சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்­ன­வுக்கு தொலை­பே­சியில் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் தற்­போது தனி­யாக புதுக் கடை நீதிவான் நீதி­மன்றில் வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அதே போல் பிர­தான விசா­ரணை அதி­காரி நிஷாந்த சில்­வாவை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்­டப்ப்ட்­டுள்­ளது. இது தொடர்­பிலும் விசா­ரணை தனி­யாக நடக்­கி­றது.

வழக்கின் பிர­தான சாட்­சி­க­ளான, வெல்­கெ­தர, உபுல் பண்­டார அகை­யோ­ருக்கும் அச்­சு­றுத்தல் விடுக்­கப்ப்ட்­டுள்­ளது. அது தொடர்பில் அவர்கள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அவர்கள் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

உபுல் பண்­டா­ர­வுக்கு அவர் ஏற்­க­னவே வழங்­கிய வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்ப்ட்ட விட­யங்­களை வாபஸ் வாங்க  அழுத்தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

 சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ரணி அஜித் பிர­சன்ன, மன்­ருக்கு வெளியே இவ்­வ­ழக்கின் விசா­ர­ணைகள் பாதிக்­கப்­படும் வண்ணம்  ஊட­கங்­க­ளுக்கு கருத்து கூறு­கின்றார். இது ஒரு நாடகம் என்­கிறார். புலிகள் டயஸ் போரா­வுக்கு ஏற்­ற­வ­கையில் விசா­ரிக்­கப்­ப­டு­கி­றது என்­கிறார். விசா­ரணை அதி­கா­ரி­க­ளான நிசாந்த, ஷானி ஆகி­யோரை மிக கேவ­ல­மாக பேசு­கின்றார்.' என்றார்.

 இதன்­போது சட்­டத்­த­ரணி மேஜர் அஜித் பிர­சன்ன மன்­றுக்குள் நுழைந்த நிலையில், இது தொடர்பில் கருத்து கூற அவ­காசம் வழங்­கப்­பட்­டது.

  விசா­ர­ணை­களை பாதிக்கும் வண்ணம் நான் எத­னையும் கூற­வில்லை. அந்த குர்­ரச்­ச­டடை நான் மறுக்­கின்றேன். குற்றப் புல­ன­யவுப் பிரிவு பக்­கச்­சார்­பாக செயல்­ப­டு­கி­றது என்று நான் இம்­மன்றில் கூறு­வ­தையே வெளியில் கூறினேன். நான் கூறிய அனைத்தும் உண்­மை­க­ளே­யாகும்,  அதனை உறுதி செய்ய என்­னிடம் ஆதாரம் உள்­ளது.' என அவர் இதன்­போது தெரி­வித்தார்.

விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் அரசின் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட அரச சட்­ட­வாதி ஜனக பண்­டார அந்த கருத்­துக்­க­ளுக்கு எஹிர்ப்பு வெளி­யிட்டார். விசா­ரணை அதி­கா­ரி­களில் குறை­பா­டுகள் இருப்பின் அவற்றை நீதி­மன்றில் கூற வேண்டும். அல்­லது குறிப்­பிட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு கூற வேண்டும். அதனை விட்­டு­விட்டு அவர்­களின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்தும் வண்னம் பிர­சித்­த­மாக கருத்து வெளி­யி­டு­வது அவர்­களை அச்­சு­ருத்­து­வ­தற்கும் அவர்­க­ளது விசா­ர­ணை­களை மழுங்­க­டிக்கச் செய்­வ­தற்­கு­மான செய­லாகும்.

 விசா­ரணை அதி­காரி ஷானி அபே­சே­க­ரவின் பிள்­ளைகள் வெளி­நாட்டில் இருப்­ப­தா­கவும், அவர்கள் பாதிக்­கப்­பட்ட தரப்­பிடம் பெற்ற பணம் மூலம் கல்வி கர்­ப­தா­கவும் ஒரு இடத்தில் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர். ஷானி அபே­சே­க­ரவை நான் சந்­தித்தேன். அவ­ரது பிள்­ளைகள் விமான நிலைய மண்னை ஒரு முறை கூட மிதித்­தது இல்லை என அவர் என்­னிடம் கூறினார். யேன் அதி­கா­ரி­களின் குடும்­பத்­தாரை இழுத்து இவ்­வாறு அடிப்­ப­டை­யற்ற கருத்­துக்­களை கூற வேண்டும்.

இது தொடர்ந்தால் தண்­டனை சட்டக் கோவையின் 189 மற்றும் பாதிக்­கப்­பட்டோர், சாட்­சிகள் பாது­காப்பு கட்­டளை சட்­டத்தின் 8,9 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டி வரும். இக்­க­ருத்­துக்­களை கூறி­யவர் சட்­டத்­த­ரணி என்­பதால் இதனை நான் கூறு­கின்றேன். அந்த நிலை­மைக்கு செல்ல அவ­சியம் ஏற்­ப­டாது என நம்­பு­கின்றேன்.' என்றார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன வாதிட்டார்.

'  ஆரம்­பத்தில் இருந்து நாம் இந்த விசா­ர­ணைகள் பக்­க­சார்­பா­னது என்­கிறோம். இதில் கப்பம் பெற்­ற­வர்கள் இன்னும் கைது ண்டிஸ் என்­ப­வரும்  சட­லங்­களை ஏற்­றி­ய­தாக வெல­கெ­தர நாம் இந்த விசாரணைகள் பக்கசார்பானது என்கிறோம். இதில் கப்பம் பெற்றவர்கள் இன்னும் கைது ண்டிஸ் என்பவரும்  சடலங்களை ஏற்றியதாக வெலகெதர கூறிய நிலையில் மெண்டிஸ் இன்னும் கைதாகவில்லை. 

இவ்வாறு பல முன்னுக்கு பின் முரணான நிலைமைகள் காணப்படுகின்றன.  எனவே உடன் இந்த விசாரணைகளை குற்றப் புலனயவுப் பிரிவிடம் இருந்து அகற்றி பொலிஸின் வேறு எந்தவொரு பிரிவிடமேனும் ஒப்படைக்க உத்தர்விடவும் என கோரினார்.

 இது தொப்டர்பில் விரிவாக எழுத்து மூல வாதங்களை முன்வைக்க இதன்போது நீதிவான் அவருக்கு ஆலோசனை வழ்னக்கினார்.

 இந் நிலையில் 8 ஆவது சந்தேக நபருக்கு தண்டனை சட்டக் கோவையின் 296 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக குற்றம் சுமத்தப்ப்ட்டுள்ள நிலையில், பிணை   வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை என கூரிய நீதிவான் அவரை எதிர்வரும் 25 ஆம் திக்திவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அன்றைய தினம் எழுத்து மூல வாதங்களை முன்வைக்க  ஆலோசனை வழ்னக்கிய நீதிவான், பிணையில் உள்ள சந்தேக நபர்கள் எதிர்வரும் பெப்ர்வரி 8 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.