ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும், முஸ்­லிம்­க­ளையும் பிரிப்­ப­தற்கு சில விஷ­மிகள் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கின்­றனர். இதில் நாங்கள் நிதா­ன­மாக இருக்க வேண்­டு­மென கிழக்கு மாகாண முன்னாள் அமைச்­சரும், தேசிய காங்­கி­ரஸின் தேசிய அமைப்­பா­ள­ரு­மான எம்.எஸ். உது­மா­லெப்பை தெரி­வித்தார்.

அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபைக்கு தேசிய காங்­கிரஸ் கட்­சியில் ஒலுவில் பிர­தே­சத்­தி­லி­ருந்து போட்­டி­யிடும் ஏ.சீ. ரியாஸ், எம்.எஸ்.எம். ஜுமான் ஆகி­யோரை ஆத­ரித்து நடை­பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், 

நமது மக்கள், மக்கள் பிர­தி­நி­க­ளுக்கு வாக்­க­ளித்­து­விட்டு தங்­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை எல்லாம் செய்து தரு­மாறு கோரிக்கை விடுக்­கின்­றனர். நம்மால் முடிந்­த­வரை வாக்­க­ளித்த மக்­களை ஏமாற்­றாமல் மக்­களின் தேவை­களை அறிந்து சேவை­யாற்ற வேண்டும். 

சமூ­கத்தில் எம்­மோடு இணைந்து வாழும் எமது ஏழை மக்­களின் நலனில் நாம் எப்­போதும் விசேட கவனம் செலுத்த வேண்டும். 

முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியில்  நீண்ட கால­மாக செயற்­பட்ட முக்­கிய பிர­மு­கர்கள் தேசிய காங்­கி­ரஸின் வேட்­பா­ளர்­க­ளா­கவும் பொத்­துவில் பிர­தே­சத்தின் அர­சியல் மாற்­றத்­திற்­கான செயற்­பா­டு­க­ளுக்கும் வழங்கி வரும் பங்­க­ளிப்­பு­களை  இப்­பி­ர­தேச மக்­களை எப்­போதும் நேசிக்கும் தேசிய காங்­கிரஸ் கட்­சியின் சார்பில் நன்­றி­யினை தெரி­வித்துக் கொள்­கின்றேன். 

என­வேதான் எமது சமூகம் எதிர்­பார்க்­கின்ற அர­சியல் ரீதி­யான அடை­வு­களை அடைந்து கொள்­வ­தற்கும் இந்­நாட்டில் வாழ்­கின்ற சகோ­தர இனங்­க­ளான தமிழ், சிங்­கள மக்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்­கு­மான அர­சியல் தீர்வை நோக்­கிய பய­ணத்தில் இன்று தேசிய காங்­கிரஸ் கட்சி பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. 

இந்த பய­ணத்­திற்கு வலுச்­சேர்க்கும் வகையில் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஒலுவில் பிர­தே­சத்தில் இரண்டு வட்­டா­ரங்­க­ளிலும்  தேசிய காங்­கிரஸ் கட்சி சார்­பாக  போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களை வெற்­றி­பெறச் செய்து எமது நாட்டின் வளர்ச்­சிக்கும் எமது பிர­தே­சத்தின் அபி­வி­ருத்­திக்கும் ஆணை­வ­ழங்கி வெற்­றி­பெறச் செய்ய வேண்டும். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மர்ஹும் அஷ்­ரஃபின் கொள்­கையை மழுங்­க­டித்து அதன் பாதையை வேறு திசையில் மாற்றி சென்று கொண்­டி­ருக்­கின்­றது. 

தற்­போ­தைய அர­சாங்கம் ஸ்திர­மற்று காணப்­ப­டு­வதால் மக்கள் நாளாந்தம் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றார்கள். 

முஸ்­லிம்­களின் அர­சியல் உரி­மைக்­காக மர்ஹும் எம்.எச்.எம். அஷ்­ர­ஃபினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அன்று முஸ்­லிம்­க­ளுக்கு மட்டுமல்­லாது ஏனைய சமூ­கத்­தி­னருக்­கா­கவும் குரல் கொடுத்­தது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி உரு­வாக்­கப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால் முஸ்­லிம்கள் இந் நாட்டில் சுதந்­தி­ர­மாக வாழ முடி­யாது பேரின­வா­தி­களின் கைக்குள் சிக்கி வாழ வேண்­டிய சூழ்நிலை ஏற்­பட்­டி­ருக்கும்.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்­ரஃபின் பாசா­றையில் வளர்க்­கப்­பட்ட நாங்கள் அவ­ரது மறை­வுக்குப் பின்னர் தேசிய காங்கிரஸ் கட்­சியை உரு­வாக்கி அவரால் விட்டுச் சென்ற பணி­களை முன்­னெ­டுத்துச் செல்­கின்றோம். அந்த வகையில் தேசிய காங்­கிரஸுக்கு தற்போது அரசியல் பலம் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

பெரும்பான்மை வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் பறிபோயுள்ள முஸ்லிம்களின் காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த நல்லாட்சி அரசினூடாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றார்.