பிரித்­தா­னிய கேம்பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வணிகத் துறையில் கல்வி கற்­பதை தனது இலட்­சி­ய­மாகக் கொண்ட 17 வயது யுவ­தி­யொ­ருவர் அந்தக் கற்கை நெறிக்­கான கட்­ட­ணத்­திற்கு தேவை­யான பணத்தைப் பெறு­வ­தற்­காக தனது கன்­னித்­தன்­மையை 890,000 ஸ்ரேலிங் பவு­ணுக்கு ஏலத்தில் விட்­டுள்ளார்.

 மொடல் அழ­கி­யாக பகுதி நேர தொழில் புரிந்து வரும் நிகொலி என  புனைப்பெயரால் அழைக்­கப்­படும் யுவ­தியே இவ்­வாறு தனது கன்னித் தன்­மையை ஏலத்தில் விட்­டுள்ளார்.

“எனக்கு என்னை விடவும் மிகவும் வய­தான  ஆணொ­ரு­வ­ருடன் காதல் தொடர்பு உள்­ளது. ஆனால் நான் தற்­போதும் கன்­னி­யா­க­வே­யுள்ளேன். நான் எனது மன­துக்குப் பிடித்­த­மான நான் எதிர்­கா­லத்தில் திரு­மணம் செய்­ய­வுள்ள ஒரு­வ­ருக்கே எனது கன்னித் தன்­மையை விற்க தீர்­மா­னித்­துள்ளேன்"  என நிகோலி  தெரி­வித்தார்.  

அவர்  உயர்­மட்ட மொடல் அழ­கிகள் தொடர்­பான ஐரோப்­பிய துணையைத் தேடும் இணை­யத்­த­ளத்தின் மூலம்  தனது கன்னித் தன்­மையை ஏலத்தில் விட்­டுள்ளார்.

 மேற்­படி இணை­யத்­த­ளத்தில் மொத்தம் 5  பெண்கள் தமது கன்­னித்­தன்­மையை ஏலத்தில் விட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­படி பெண்­களின் கன்னித் தன்­மையை உறுதி செய்ய மருத்­துவ பரி­சோ­தனை மேற்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­படும் என அந்த இணை­யத்­த­ளத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.