முத்­த­ரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் இன்று பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

பங்­க­ளா­தேஷில் இலங்கை, பங்­க­ளாதேஷ், சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத்­த­ரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த திங்­கட்­கி­ழமை டாக்­காவில் ஆரம்­ப­மா­னது.

முதல் போட்டியில் பங்களாதேஷ் – சிம்பாப்வே அணிகள் மோதியிருந்தன. இதில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்தத் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் இலங்கை அணி சிம்­பாப்­வேயை எதிர்த்­தா­டு­கின்­றது.

2018ஆம் ஆண்டில் இலங்கை அணி விளை­யா­டப்­போகும் முதல் போட்டி இது­வென்­பதால் எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. அது­மட்­டு­மில்­லாது இலங்கை அணித் தலை­வ­ராக மீண்டும் பொறுப்­பேற்­றுள்ள அஞ்­சலோ மெத்­தியூஸ் தான் விட்ட இடத்­தி­லி­ருந்தே தலைமைப் பத­வியை மீண்டும் ஆரம்­பிக்­கிறார்.

அதா­வது கடந்த ஆண்டு சிம்­பாப்வே அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி ஒருநாள் தொடரை வென்­றது.

இந்தத் தொடர் தோல்­விக்குப் பின்­னரே இலங்கை அணித் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து அஞ்­சலோ மெத்­தியூஸ் வில­கிக்­கொண்டார்.

அதன்­பி­றகு இலங்கை அணிக்கு ஏகப்­பட்ட தலை­வர்­கள் மாற்றப்பட்டுவிட்டனர். ஆனால் இலங்கை அணி வேக­மெ­டுப்­ப­தாக தெரி­ய­வில்லை. அதனால் மீண்டும் அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸையே தலை­வ­ராக நிய­மித்­தது இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம்.

சிம்­பாப்வே அணியால் பத­வியை இழந்த அஞ்­சலோ மெத்­தியூஸ் மீண்டும் தலைமைப் பத­வியை பொறுப்­பேற்று சிம்­பாப்­வேக்கு எதி­ராக முத­லா­வது போட்­டியில் மோத­வி­ருப்­பதால் இன்­றைய போட்டி பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அது­மட்­டு­மன்றி இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ரான ஹத்­து­ரு­சிங்க இலங்கை அணியுடன் விளையாடப்போகும் முதல் தொடர் என்பதாலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்தத் தொடர் விசேட இடத்தைப் பிடித்துள்ளது.

ஹத்துருசிங்க பயிற்சியின் கீழ் பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை அணி நிச்சயம் மாற்றத்தை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இலங்கை அணி விவரம்

அஞ்­சலோ மெத்­தியூஸ், உபுல் தரங்க, தனுஷ்க குண­தி­லக, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்­திமால், குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குண­ரத்ன, நிரோஷன் டிக்­வெல்ல, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சாமிர, ஷெஹான் மதுசங்க, அகில தனஞ்சய, சந்தகன், வனிது ஹசரங்க ஆகியோர் 16 பேர் கொண்ட இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.